For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  லிப் கிஸ் அடிக்க மாட்டேன் என்கிற பாலிசியை மீறினாரா சல்மான் கான்? ராதே ஹீரோவின் அதிரடி விளக்கம்!

  |

  மும்பை: 55 வயதாகும் முரட்டு சிங்கிள் பாலிவுட் ஹீரோ சல்மான் கான் இதுவரை சினிமாவில் நேரடியாக லிப் கிஸ் அடிக்க மாட்டேன் என்கிற கொள்கையை கொண்டு உள்ளார்.

  இந்திய சினிமாவில் வெகு சில நடிகர்களே ஆன் ஸ்க்ரீனில் நாயகிகளுடன் லிப் லாக் முத்தத்தை பகிர்வதில்லை என்கிற குறிக்கோளுடன் நடித்து வருகின்றனர்.

  தொடரும் சோகம்.. கஜினி பட தயாரிப்பாளர் கொரோனாவுக்கு பலி.. திரைத்துறை அதிர்ச்சி! தொடரும் சோகம்.. கஜினி பட தயாரிப்பாளர் கொரோனாவுக்கு பலி.. திரைத்துறை அதிர்ச்சி!

  சில நேரங்களில் அந்த ஹீரோக்களின் படங்களிலும் லிப் லாக் சீன்கள் இடம்பெறும். ஆனாலும், அவை சீட் செய்யப்பட்ட காட்சிகள் தான்.

  பேச்சிலர்

  பேச்சிலர்

  இந்திய சினிமாவில் அதிகளவில் ரசிகர்களை வைத்துள்ள நடிகர் சல்மான் கானுக்கு 55 வயதாகிறது. எத்தனையோ முன்னணி நடிகைகளின் டேட்டிங், காதல் என கிசுகிசுக்கப்பட்டாலும், நடிகர் சல்மான் கான் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் மோஸ்ட் எலிஜிபல் பேச்சிலராக திகழ்ந்து வருகிறார்.

  ராதே ரிலீஸ்

  ராதே ரிலீஸ்

  ரசிகர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை மீறக் கூடாது என்பதற்காக இந்த ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஜீ சினி பிளெக்ஸில் பே பர் வியூ முறையில் ராதே படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடுகிறார் அந்த படத்தின் நடிகரும் தயாரிப்பாளருமான சல்மான் கான். இயக்குநர் பிரபுதேவா இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக திஷா பதானி நடித்துள்ளார்.

  ஜீரோ பாக்ஸ் ஆபிஸ்

  ஜீரோ பாக்ஸ் ஆபிஸ்

  ராதே படம் திட்டமிட்டப்படி ஈகைத் திருநாளுக்கு வெளியாகும் என்கிற அறிவிப்பை நேற்று பத்திரிகையாளர்களுடன் ஜூம் காலில் பங்கேற்று அறிவித்தார் நடிகர் சல்மான் கான். மேலும், தியேட்டர் அதிபர்கள் இதன் மூலம் நஷ்டத்தை சந்திப்பார்கள் என்பதை அறிவேன். விரைவிலேயே கொரோனா பாதிப்பு சரியான உடன் தியேட்டர்களில் படங்கள் வெளியாகி அவர்களின் பிரச்சனை தீரும் என நம்புகிறேன் என்ற அவர், இந்த படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் ஜீரோவாக இருந்தாலும் கவலையில்லை, ரசிகர்கள் இந்த இக்கட்டான சூழலில் சற்றே சந்தோஷமடைந்தால் போதும் என்றார்.

  லிப் கிஸ் பாலிசி

  லிப் கிஸ் பாலிசி

  பாலிவுட்டின் முன்னணி நடிகரான சல்மான் கான் இதுவரை ஆன் ஸ்க்ரீனில் எந்தவொரு நடிகையுடனும் லிப் லாக் முத்தக் காட்சியில் நடித்ததே இல்லை. 1989ம் ஆண்டு வெளியான மெயினே பியார் கியா படத்தில் கண்ணாடி டோரில் இருக்கும் ராணி முகர்ஜியின் லிப்ஸ்டிக் இம்பிரஷனுக்கு முத்தம் கொடுத்து நடித்திருப்பார் சல்மான் கான்.

  ரசிகர்கள் அதிர்ச்சி

  ரசிகர்கள் அதிர்ச்சி

  இந்நிலையில், சமீபத்தில் வெளியான ராதே படத்தின் பாடல் காட்சி ஒன்றில் நடிகை திஷா பதானிக்கு சல்மான் கான் லிப் லாக் முத்தம் கொடுப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருப்பதை பார்த்த ரசிகர்கள், சல்மான் கான் தனது நோ கிஸ்சிங் பாலிசியை மீறி விட்டாரா என ஷாக் ஆகினர்.

  டக் டேப் முத்தம்

  டக் டேப் முத்தம்

  நேற்று நடந்த ஜூம் கால் பத்திரிகையாளர்கள் சந்திப்பில், பத்திரிகையாளர் ஒருவர் இது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு நடிகர் சல்மான் கான் அதிரடி விளக்கம் கொடுத்துள்ளார். இல்லை நான் இன்னமும் அந்த கொள்கையை மீறவில்லை. ஃபேமிலி ஆடியன்ஸுக்காக அதை ஒரு கொள்கையாக பின் பற்றி வருகின்றேன். இந்த படத்திலும் திஷா பதானிக்கு முத்தம் கொடுக்கவில்லை டக் டேப்புக்குத் தான் முத்தம் கொடுத்தேன் என சல்மான் கான் சிரித்துக் கொண்டே பதில் அளித்து அனைவரையும் மெர்சல் ஆக்கி உள்ளார்.

  Hey Sinamika படத்திற்காக பாடல் பாடிய Dulquer Salman | Brindha Master, Aditi Rao, Kajal
  கொரோனா உதவி

  கொரோனா உதவி

  கொரோனா காலத்தில் கஷ்டப்படும் திரைத்துறையை சார்ந்த 35 ஆயிரம் தொழிலாளர்களுக்கு சமீபத்தில் தலா 1500 ரூபாய் உதவி அளித்திருந்தார் நடிகர் சல்மான் கான். கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் கொரோனாவால் வாடும் ஏராளமான மக்களுக்கு உணவு வழங்கி உதவிகளையும் செய்து வருகிறார் இந்த ராதே ஹீரோ.

  English summary
  Salman Khan reveals the secret about the Radhe movie viral lip lock kiss scene in recent zoom call interactions.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X