இளம்பெண்ணை பலாத்காரம் செய்த சல்மான் கானின் நடிகர் நண்பர் கைது
மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் கானின் நெருங்கிய நண்பரும், நடிகருமான இந்தர் குமார் 22 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தி படங்களில் நடிப்பவர் இந்தர் குமார். அவர் சல்மான் கானுடன் சேர்ந்து வாண்டட் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சல்மான் கானின் நெருங்கிய நண்பர் இந்தர் குமார். குமாரும் நடிகை இஷா கோபிகரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். அதன் பிறகு இஷா 2009ம் ஆண்டு டிம்மி நரங் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இதையடுத்து குமார் கமல்ஜித் கௌர் என்ற பெண்ணை மணந்து 10 மாதங்களிலேயே பிரிந்தும் விட்டார். இந்நிலையில் குமார் 22 வயது இளம் மாடல் ஒருவரிடம் பாலிவுட்டில் வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி தனது வீட்டில் தங்க வைத்து உறவு கொண்டுள்ளார். இதையடுத்து அந்த பெண் மும்பை வெர்சோவா காவல் நிலையத்தில் குமார் மீது புகார் கொடுத்தார்.
அவரது புகாரின் பேரில் பாலியல் பலாத்கார வழக்குப்பதிவு செய்த போலீசார் குமாரை கைது செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











