இதுக்குத்தான எதிர்ப்பு?... இந்தாங்க கட் பண்ணிட்டோம்... தபாங் 3 டீம் அறிவிப்பு

By

மும்பை: டைட்டில் பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, அந்தப் பாடலின் சில காட்சிகளை தபாங் 3 படக்குழு எடிட் செய்துள்ளது.

பிரபுதேவா இயக்கத்தில் சல்மான்கான், சோனாக்‌ஷி சின்ஹா, கன்னட நடிகர் சுதீப், மஹி ஹில் உட்பட பலர் நடித்துள்ள இந்தி படம், தபாங் 3. இந்த படம் நாளை வெளியாகிறது.

தமிழ், கன்னடம், தெலுங்கு மொழியிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகிறது. சல்மான் கான் தனது சகோதரர் அர்பாஸ் கானுடன் தயாரித்துள்ள இந்தப் படத்தில் டைட்டில் பாடல், இடம்பெற்றுள்ளது. அதில் சாதுக்கள், மேற்கத்திய நடனம் ஆடுவது போன்ற பாடல் காட்சி இடம்பெற்றுள்ளது.

நடன காட்சிக்கு எதிர்ப்பு

நடன காட்சிக்கு எதிர்ப்பு

இதற்கு இந்து ஜன் ஜக்ருதி சமிதி என்ற அமைப்பு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. 'இந்தப் படத்தின் பாடலில் சாமியார்களையும் இந்து கடவுள்களையும் அவதூறாக சித்தரித்துள்ளனர். சாமியார்கள் மேற்கத்திய நடனம் ஆடுவது போன்ற காட்சிகளை வைத்துள்ளனர்.

புண்படுத்துகிறது

புண்படுத்துகிறது

இது மத உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளது. இதனால் படத்துக்கு வழங்கப்பட்ட சென்சார் சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என்று சென்சாருக்கு அனுப்பியிருந்த கடிதத்தில் குறிப்பிடப்பிட்டிருந்தது.

சல்மான் கண்டிப்பு

சல்மான் கண்டிப்பு

சமூக வலைத்தளத்திலும் தபாங்-3 படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று பலர் கருத்து பதிவிட்டு வந்தனர். மும்பையில் நடந்த தபாங்-3 பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற சல்மான்கான் இதைக் கண்டித்தார்.

தாமாகவே முன் வந்து

தாமாகவே முன் வந்து

இந்நிலையில் அந்தப் பாடல் காட்சியை படக்குழு நீக்கியுள்ளது. அனைவருடைய உணர்வுகளையும் மனதில் வைத்து, தானாகவே முன் வந்து அந்த பாடலில் சில ஷாட்களை எடிட் செய்துள்ளோம் என்று சல்மான் கான் பிலிம்ஸ் தெரிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X