காலால் சூப்பர் ஸ்டாரை ஓவியமாக வரைந்த மாற்றுத்திறனாளி ரசிகை: வைரல் வீடியோ

By Siva

மும்பை:சல்மான் கானின் மாற்றுத்திறனாளி ரசிகை ஒருவர் வரைந்த ஓவியம் ஹாலிவுட் நடிகர் சில்வர்ஸ்டார் ஸ்டலோனின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள், ரசிகைகள் உள்ளனர். இந்நிலையில் மாற்றுத்திறனாளி ரசிகை ஒருவர் தனது காலால் சல்மான் கானின் ஓவியத்தை வரைந்துள்ளார்.

Salman Khans fan video gets Hollywood attention

அவர் ஓவியம் வரைந்தபோது எடுத்த வீடியோவை சல்மான் கான் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு கடவுள் ஆசிர்வதிப்பாராக என்று தெரிவித்துள்ளார். சல்மான் கானின் இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஹாலிவுட் நடிகர் சில்வர்ஸ்டார் ஸ்டலோனின் கண்ணில் பட்டுள்ளது. அவரோ இது தான் அன்பு, பக்தி என்று கமெண்ட் போட்டுள்ளார்.


சல்மான் கான் வெளியிட்ட வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவர் பிற மாற்றுத்திறனாளிகளுடன் நேரம் செலவிட்டபோது எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு அவரை பாராட்டியுள்ளனர்.

சல்மான் கான் தற்போது பிரபுதேவா இயக்கத்தில் தபாங் 3 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். படப்பிடிப்பு மத்திய பிரதேசத்தில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் வில்லனாக நடிக்கிறார். படத்தில் சல்மான் கானின் தம்பி அர்பாஸ் கானும் உள்ளார்.

தபாங் 3 படத்தை தயாரித்து நடிக்கும் அர்பாஸ் கான் கூறியிருப்பதாவது,

படப்பிடிப்பு 60 சதவீதம் நிறைவடைந்துவிட்டது. செப்டம்பர் மாத இறுதியில் படப்பிடிப்பு முடிந்துவிடும். இதையடுத்து டிசம்பர் மாதம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம். டிசம்பர் மாதம் 20ம் தேதியை தேர்வு செய்து வைத்துள்ளோம்.

இந்த படத்தை நினைத்து மகிழ்ச்சியாக உள்ளேன். மக்கள் நிறைய எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர். மக்களுக்கு தபாங் மற்றும் சுல்புல் பாண்டே கதாபாத்திரம் பிடிக்கும் என்று எனக்கு தெரியும் என்றார்.

தபாங் படத்தை அபினவ் கஷ்யப் இயக்கினார். இரண்டாம் பாகத்தை அர்பாஸ் கான் இயக்கினார். தற்போது 3ம் பாகத்தை பிரபுதேவா இயக்கி வருகிறார். படப்பிடிப்பு தளத்தில் சல்மான், சுதீப் ஆகியோர் பிரபுதேவாவுடன் சேர்ந்து ஷங்கர் இயக்கிய காதலன் படத்தில் வந்த ஊர்வசி ஊர்வசி பாட்டுக்கு ஆடிய வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X