ஆமீரின் 3 இடியட்ஸ் சாதனையை முறியடித்த சல்மான் கானின் கிக்

By Siva

மும்பை: சல்மான் கான் நடித்த கிக் படம் இந்தியாவில் ஆமீர் கானின் 3 இடியட்ஸ் படம் செய்த வசூல் சாதனையை முறியடித்துள்ளது. மேலும் கிக் உலக அளவில் ரூ. 300 கோடியை வசூல் செய்துள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு ரவி தேஜா, இலியானா நடிப்பில் வெளியான ஹிட் படம் கிக். கிக் படம் ஹிட்டான சூடு ஆறி அடங்கிப்போன பிறகு அதை இந்தியில் ரீமேக் செய்துள்ளனர்.

அந்த ரீமேக்கில் சல்மான் கான், ஜாக்குலின் பெர்ணான்டஸ் நடித்துள்ளனர் என்று ஆயிரத்து ஓராவது முறையாக சொல்கிறோம். இதை கேட்க வேண்டிய நிலையில் நீங்களும் இருக்கிறீர்கள்.

ரூ.100 கோடி

ரூ.100 கோடி

சல்மானின் கிக் படம் ரிலீஸான வெறும் நான்கே நாட்களில் ஜஸ்ட் லைக் தட்டாக ரூ.100 கோடியை வசூலித்துவிட்டது. அடடே என்று நினைக்கையில் அடுத்த சாதனையைும் படைத்துள்ளது.

ரூ. 200 கோடி

ரூ. 200 கோடி

சல்மான் கான் படங்கள் இந்தியாவில் செய்த வசூல் சாதனையை கிக் முறியடித்துள்ளது. அதாவது இந்தியாவில் மட்டும் ரூ.203.19 கோடியை வசூலித்துள்ளது. இந்த தொகை திங்கட்கிழமை வரை வசூலானது.

3 இடியட்ஸ்

3 இடியட்ஸ்

ஆமீர் கான், மாதவன், ஷர்மான் ஜோஷி நடிப்பில் வெளியான 3 இடியட்ஸ் படம் இந்தியாவில் ரூ.202.46 கோடி வசூல் செய்தது. இந்த சாதனையை கிக் முறியடித்துள்ளது.

ரூ.300 கோடி

ரூ.300 கோடி

கிக் படத்தை ரூ. 300 கோடி வசூலிக்கும் வரை ஓய மாட்டோம் என்று சூளுரை எடுத்த ரசிகர்கள் தியேட்டர்களில் குவிந்தனர். இதனால் உலக அளவில் கிக் ரூ.300 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

மேலும்

மேலும்

ரூ.300 கோடி வசூலை சல்மானுக்கு கொடுத்தும் ரசிகர்கள் அடங்கியபாடை காணோம். மீண்டும் மீண்டும் படத்தை பார்த்து கிக் படம் பல சாதனைகளை படைக்கும் வரை தூங்க மாட்டார்கள் போன்று.

எப்படி பாஸ்?

எப்படி பாஸ்?

ஒரிஜினில் கிக் கூட இந்த அளவுக்கு பேசப்படவில்லை. படங்கள் சில கோடி வசூலை செய்யவே முட்டிமோதுகையில் இந்த சல்மான் மட்டும் ஈஸியாக கோடிகளை அள்ளுகிறாரே என்று தான் பலரும் வியக்கிறார்கள்.

ரூ.400 கோடி

ரூ.400 கோடி

அடுத்ததாக கிக் படம் ரூ.400 கோடி வசூல் செய்தது என்று செய்தி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. தொடரும் வசூல் வேட்டையை பார்த்தால் செய்தி வரும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X