twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சல்மான் கானின் ‘கிக்’ திரைப்படம் 2 நாளில் ரூ.50 கோடி வசூல்

    By Mayura Akilan
    |

    பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் நடித்து இரு தினங்களுக்கு முன் வெளிவந்த 'கிக்' திரைப்படம் வெளியான 2 நாளில் ரு.50 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    முதல் நாளில் சுமார் 27 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது சல்மான் கான் நடித்து 2012ம் ஆண்டில் வெளிவந்த 'ஏக் தா டைகர்' பட வசூலை விட குறைவாகும். ஏக் தா டைகர் முதல்நாளில் 32 கோடி ரூபாயை வசூலித்தது.

    தெலுங்கு, தமிழ் டப்பிங்

    தெலுங்கு, தமிழ் டப்பிங்

    தெலுங்கில் ரவி தேஜா நடிக்க 'கிக்' என்ற பெயரில் வெளிவந்த இந்தப் படம் தமிழில் ஜெயம் ரவி நடிக்க 'தில்லாலங்கடி'யாக வெளிவந்து சுமாரான வெற்றியையே பெற்றது. ஹிந்தியில் சல்மான்கான் நடிப்பில் மிகப் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு வெளிவந்துள்ளது கிக்.

    ரூ.100 கோடி கிளப்

    ரூ.100 கோடி கிளப்

    படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைத்துள்ளதால் பாக்ஸ்ஆபிஸ் ஹிட்டுதான் என்கின்றனர் தயாரிப்பாளர்கள். இன்னும் சில தினங்களிலேயே படம் 100 கோடி ரூபாய் வசூலைத் தொட்டுவிடும் என்கிறார்கள். பாலிவுட்டின் வசூல் சக்கரவர்த்தி தான்தான் என சல்மான் கான் தொடர்ந்து நிரூபித்து வருகிறார்.

    முதல்நாள் வசூல் சாதனையில்

    முதல்நாள் வசூல் சாதனையில்

    பாலிவுட்டில் வெளிவந்து முதல் நாளில் வசூல் சாதனை புரிந்த படங்களில் 'கிக்' நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. ஆமீர்கான் நடித்து வெளிவந்த 'தூம் 3' படம் 36 கோடி ரூபாயையும், ஷாரூக்கான் நடித்து வெளிவந்த 'சென்னை எக்ஸ்பிரஸ்' படம் 33 கோடி ரூபாயையும், வசூலித்தது.

    சல்மான்கானின் வசூல்

    சல்மான்கானின் வசூல்

    2012ல் வெளியான சல்மான்கானின் ஏக் தா டைகர் 32 கோடி ரூபாய் வசூலித்தது. தற்போது 'கிக்' 27 கோடி ரூபாயை வசூல் செய்து நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

    English summary
    Salman Khan’s latest release ‘Kick‘ has kick-started on a magnificent note. The film, also starring Jacqueline Fernandez, Randeep Hooda and Nawazuddin Siddiqui, has minted a whopping Rs 50 crore in two days of its release.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X