நாளைக்கு படம் ரிலீஸ்... இன்னைக்கு புது போஸ்டர் ரிலீஸ்... ஒரு முடிவோட தான் இருக்கு ராதே குழு

மும்பை : மிகுந்த எதிர்பார்ப்பை இந்திய அளவில் ஏற்படுத்தியுள்ளது சல்மான் கான் நடிப்பில் நாளை வெளியாகவுள்ள ராதே திரைப்படம்.

பிரபு தேவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் தற்போது கொரோனா பாதிப்பு உள்ள நிலையில் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் படத்தின் புது போஸ்டர் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது.

நாளை ரிலீஸ்

நாளை ரிலீஸ்

பாலிவுட்டில் மட்டுமின்றி இந்திய அளவில் சிறப்பான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது சல்மான் கான் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள ராதே திரைப்படம். கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது திரையரங்குகளில் ரிலீஸ் செய்யாமல் ஓடிடியில் நாளைய தினம் ரிலீசாக உள்ளது.

சிறப்பான வரவேற்பு

சிறப்பான வரவேற்பு

இந்த படத்தின் 4 பாடல்கள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு சிறப்பான கவனத்தை பெற்றுள்ளது. தொடர்ந்து பிரமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டனர். இரு தினங்களுக்கு முன்பு வெளியான ஜூம் ஜூம் பாடலும் வெளியான 24 மணிநேரத்தில் அதிகமான பார்வைகளை பெற்றது.

பிரபு தேவா இயக்கம்

பிரபு தேவா இயக்கம்

தொடர்ந்து இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. சல்மான் கான் பிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. பிரபு தேவா இயக்கத்தில் சல்மான் இணைந்த முந்தைய படமும் சிறப்பான வெற்றியை பெற்ற நிலையில், இந்த படம் மிகவும் சிறப்பான வெற்றியை அடையும் என்று எதிர்பார்க்கலாம்.

புதிய போஸ்டர்

புதிய போஸ்டர்

நாளை மதியம் 12 மணியளவில் படம் ரிலீசாக உள்ள நிலையில், தற்போது படத்தன் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் கண்ணாடியை உடைத்துக் கொண்டு சல்மான் கான் ஆக்ரோஷத்துடன் வெளிவருவது போல அமைந்துள்ளது. மொத்தத்தில் அவரது ரசிகர்களுக்கு இந்த படம் சிறப்பான ட்ரீட்டாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X