பிரபுதேவா இயக்கத்தில்… ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த ‘ராதே’ டிரைலர் அவுட்!
சென்னை : பிரபுதேவா இயக்கி உள்ள ராதே படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
இந்த படத்தில் சல்மான் கான், திஷா பதானி, ஜாக்கி ஷெராப் பரத், ரன்தீப் ஹூடா உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மே 13ந் தேதி திரையரங்கில் வெளியாக இப்படம், அதே நாளில் ஜீ ப்ளெக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

பிரபுதேவா
சல்மான் கான் மற்றும் பிரபுதேவா வாண்டட் படத்தின் மூலம் முதன் முறையாக கூட்டணி சேர்ந்தனர். அந்த படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மீண்டும் தபாங் 3 படத்தில் கூட்டு சேர்ந்தனர். இந்த திரைப்படமும் வெற்றி பெற மூன்றாவது முறையாக இருவரும் ராதே படத்தில் இணைந்துள்ளனர்.

ஆக்ஷன் காட்சிகள்
இந்நிலையில் இத்திரைப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகி உள்ளது. அதில், கேங்ஸ்டர் மற்றும் போதை பொருட்கள் தொடர்பாக அதிரடியாக ஆக்ஷன் காட்சிகள் நிரம்பியுள்ளன. இப்படத்தில் சல்மான் கான், திஷா பதானி, மேகா ஆகாஷ், ஜாக்கி ஷெராப், ரன்தீப் ஹூடா உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பிரபுதேவா நடிக்கிறார்
பிரபு தேவா நடிகராக பஹீரா படத்தில் நடித்துள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இதன் ட்ரைலர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருகிறது.

பிரபுதேவா நடிக்கிறார்
பிரபு தேவா நடிகராக பஹீரா படத்தில் நடித்துள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இதன் ட்ரைலர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருகிறது.


Click it and Unblock the Notifications











