லாக்டவுனில் உயர்ந்த சம்பளம்.. பிக்பாஸ்-14-ஐ தொகுத்து வழங்க சல்மானுக்கு இவ்ளோ கோடியா? அப்ப கமலுக்கு?

By

மும்பை: பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, நடிகர் சல்மான் கானுக்கு வழங்கப்படும் சம்பளம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது.

Recommended Video

Bigg Boss 4 Tamil Contestants List • Kamal Hassan | Filmibeat Tamil

இந்தியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் நடிகர், நடிகைகள் காதலில் விழுவது வாடிக்கை. சிலர் திருமணம் செய்துகொள்கின்றனர்.

சல்மான் கான்

சல்மான் கான்

இதில் பங்குபெறும் நடிகர், நடிகைகளுக்கு சினிமா வாய்ப்புகளும் அதிகமாக கிடைக்கின்றன என்பது போனஸ். இந்தியில் இந்த நிகழ்ச்சியை பிரபல ஹீரோ, சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்று சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி இருந்தார். 4வது சீசனையும் அவர்தான் தொகுத்து வழங்க உள்ளார்.

நடிகர் கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன்

இதுவரை தமிழ் மற்றும் தெலுங்கில் 3 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் 4 ஆவது சீசன், கொரோனாவால் தாமதமானது. ஒவ்வொரு வருடமும் ஜூன், ஜூலை மாதங்களில் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்த நிலையில், இம்முறை நடத்தப்படுமா என்பது கேள்விக்குறியாக இருந்தது. ஆனால், விரைவில் வேலையை ஆரம்பிக்கலாம் என்று கூறி இருக்கிறார் கமல்ஹாசன்.

நடிகர் நாகார்ஜுனா

நடிகர் நாகார்ஜுனா

இதனால் விரைவில் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. தெலுங்கு பிக்பாஸ் சீசன் 4- அடுத்த மாதம் 6 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இதை நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்குகிறார். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் மாதம் தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக நடிகர் சல்மான் கானுக்கு வழங்கப்படும் சம்பளம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

சம்பளம் ரூ.250 கோடி

சம்பளம் ரூ.250 கோடி

அவருக்கு, ரூ.250 கோடி சம்பளமாக வழங்கப்படுகிறது. அதாவது அவர் படப்பிடிப்பில் பங்கேற்கும் ஒரு எபிசோடுக்கு ரூ.10.25 கோடி என்றும் ஒரே நாளில், 2 எபிசோடில் அவர் நடிப்பார் என்றும் அதனால் ஒரு நாளுக்கு ரூ.20.50 கோடி வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதோடு அந்த சேனல் நடத்தும் விருது நிகழ்ச்சிகளிலும் சல்மான் கலந்துகொள்ள வேண்டுமாம். அதற்கும் சேர்த்தே இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

கடந்த சீசன் வரை

கடந்த சீசன் வரை

பிக் பாஸ் 4-வது சீசன் முதல் 6-வது சீசன் வரை ஒரு நாளுக்கு, இரண்டரை கோடி வாங்கினார் சல்மான். 7-வது சீசனில் ரூ.5 கோடி ஆனது. 2014 ஆண்டு அது ரூ. 5.5 கோடியாகவும் 2015-ல் எட்டு கோடியாகவும் கடந்த சீசன் வரை ரூ.11 கோடி சம்பளம் வாங்கினார். இப்போது அவர் சம்பளம் ஒரு நாளுக்கு ரூ.20.50 கோடியாக உயர்ந்துள்ளது.

கொரோனா லாக்டவுனில்

கொரோனா லாக்டவுனில்

கொரோனா லாக்டவுனில் நடிகர் சல்மான் கானின் சம்பளம் அதிகரித்துவிட்டது என்று பாலிவுட்டில் கூறப்படுகிறது. இதற்கிடையே நடிகர் சல்மான் கானுக்கு இவ்வளவு தொகை கொடுக்கப்படுவதால் தமிழ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசனுக்கு எத்தனை கோடி கொடுப்பார்கள் என்று கேட்கிறார்கள், ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X