»   »  விருது விழாவில் வியூகம் அமைத்து ஐஸ்வர்யாவை தவிர்த்த சல்மான்கான்!

விருது விழாவில் வியூகம் அமைத்து ஐஸ்வர்யாவை தவிர்த்த சல்மான்கான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தனது முன்னாள் காதலியும், உலக அழகியுமான ஐஸ்வர்யா ராயைத் தொடர்ந்து தவிர்த்து வருகிறார் நடிகர் சல்மான்கான்.

சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஸ்டார் டஸ்ட் விருதுகள் 2015ல் பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Salman Khan's Strategy To Avoid Aishwarya Rai Bachchan

இந்த விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராய் தனது மாமனார் அமிதாப் பச்சனுடன் கலந்து கொண்டார்.அதே நேரம் சல்மான் கான் தனது பாதுகாவலர்களுடன் சோலோவாக வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

விருதுகள் வழங்கும் விழாவில் விரிக்கப்பட்டு இருந்த சிவப்புக் கம்பளத்தில் ஐஸ்வர்யா ராய் நடந்த சில நிமிடங்களில் சல்மான் கானும் நடந்து வந்தார்.

எனினும் விழா அரங்கில் இருவரும் ஒரே வரிசையில் அமர்ந்தபோதும் சல்மான் கான் தனது கவனத்தை துளியும் ஐஸ்வர்யா ராய் இருந்த பக்கம் திருப்பவில்லை.

மேலும் ஷாரூக்கான், கஜோல் இருவரையும் கட்டித் தழுவிய சல்மான் கான் அங்கிருந்த அனைவரிடமும் சுவாரஸ்யமாக உரையாடிக் கொண்டிருந்தார்.

சல்மான் இருந்த பக்கம் செல்வதையே ஐஸ்வர்யா ராய் தவிர்த்தார். அதே போல ஐஸ்வர்யா இருந்த பக்கம் திரும்புவதற்கு கூட சல்மான் யோசித்தார்.

ஒருவரை ஒருவர் தவிர்க்கும் இந்த போட்டியில் முடிந்தவரை சல்மான்கான், ஐஸ்வர்யா ராய் இருவருமே வெற்றிக்கனியை பறித்தனர். இருவருமே அங்கிருந்த அனைவரையும் தங்களது நடவடிக்கையால் திரும்பிப் பார்க்க வைத்தனர்.

முன்னதாக ஐஸ்வர்யா கலந்து கொண்டதால் அம்பானி தம்பதியினர் அளித்த பார்ட்டிக்கு சல்மான்கான் செல்லவில்லை எனபது குறிப்பிடத்தக்கது.

ஐஸ்வர்யா ராய், சல்மான் கானின் விலகி 13 ஆண்டுகளுக்கும் மேலே ஆகிறது எனினும் இன்னும் தனது முன்னாள் காதலியை மறக்க முடியாமல் தவித்து வருகிறார் சல்மான் கான்.

English summary
In Stardust Awards 2015 Function Salman Khan's Strategy To Avoid his Ex Girlfriend Aishwarya Rai Bachchan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil