அடேங்கப்பா 350 கோடியா? பிக் பாஸ் சீசன் 15க்கு சல்மான் கான் வாங்கப் போகும் சம்பளம் இவ்வளவா?

மும்பை: பாலிவுட்டில் எத்தனை ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் சல்மான் கான் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதுவுமே இதுவரை ஈடாகாத நிலையில் தான் உள்ளது.

இதுவரை 14 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ள இந்தி பிக் பாஸ் சீசன் 15க்காக காத்திருக்கிறது.

விரைவில் தொடங்க உள்ள பிக் பாஸ் சீசன் 15ஐ தொகுத்து வழங்கப் போகும் நடிகர் சல்மான் கானுக்கு மிகப்பெரிய தொகை சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக ஆச்சர்யமூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

நாடு முழுவதும்

நாடு முழுவதும்

வெளிநாட்டில் பிக் பிரதர் என பிரபலமான இந்த நிகழ்ச்சி பிக் பாஸ் எனும் பெயரில் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் ஒளிபரப்பாகி வருகின்றன. இந்தியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஏகப்பட்ட மொழிகளிலும் ஒளிபரப்பாகி இந்திய ரசிகர்களை கவர்ந்துள்ளது.

சல்மான் கான் தான் ஹோஸ்ட்

சல்மான் கான் தான் ஹோஸ்ட்

தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குவது போல இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியை பல சீசன்களாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்குகிறார். பாலிவுட்டில் சல்மான் கானுக்கு உள்ள பெரிய ஃபேன் பேஸ் இந்த நிகழ்ச்சியின் டிஆர்பிக்கு மிகப்பெரிய பலத்தை கொடுத்துள்ளது.

படங்கள் சொதப்பினாலும்

படங்கள் சொதப்பினாலும்

நடிகர் சல்மான் கான் நடிப்பில் சில ஆண்டுகளாக வெளியான பல படங்கள் தோல்வியை தழுவினாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களை அவர் வெளுத்து வாங்கும் விதத்தால் எந்தவொரு சொதப்பலும் இல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனும் வெற்றிகரமாக ஹிட் அடித்து வருகின்றன.

350 கோடி சம்பளம்

350 கோடி சம்பளம்

ஒவ்வொரு சீசனுக்கும் நடிகர் சல்மான் கானின் சம்பளம் 100 முதல் 300 கோடி வரை உயர்த்தப்பட்டு வந்த நிலையில், வரும் அக்டோபர் 3ம் தேதி தொடங்கவுள்ள 15வது சீசனுக்கு நடிகர் சல்மான் கானுக்கு 350 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

டைகர் 3

டைகர் 3

டைகர் 3 படத்தின் ஷூட்டிங்கிற்காக ரஷ்யா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு நடிகை கத்ரீனா கைஃப் உடன் சென்ற சல்மான் கான் வெளிநாடு படப்பிடிப்புகளை முடித்த நிலையில், பிக் பாஸ் சீசன் 15ன் புரமோ ஷூட்டிங்கில் சமீபத்தில் கலந்து கொண்டு பட்டையை கிளப்பினார்.

பிக் பாஸில் சுஷாந்த் காதலி

பிக் பாஸில் சுஷாந்த் காதலி

மோஷின் கான், திஷா வகானி, அனுஷ்கா தண்டேகர், அமித் தண்டோன், அர்ஜுன் பிஜ்லானி, ரியா சக்கரவர்த்தி, நேஹா மர்தா, சனாயா இரானி, குல்கி ஜோஷி, சுர்பி சந்தனா, ரீம் ஷேக் உள்ளிட்ட 11 போட்டியாளர்களின் கன்ஃபார்ம் லிஸ்ட் வெளியாகி உள்ளது. மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் காதலி ரியா சக்கரவர்த்தி மீது தான் பலரது கவனமும் திரும்பியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X