Salman Khan: அட்லீயின் பேபி ஜான்.. கேமியோவில் தெறிக்கவிட்ட சல்மான் கான்.. வாங்கிய சம்பளம் எவ்வளவு?
மும்பை: நடிகர் விஜய், சமந்தா, எமி ஜாக்சன், மகேந்திரன், ராதிகா, பிரபு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் அட்லீ இயக்கத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான படம் தெறி. இந்தப் படத்தின் இந்தி ரீமேக் படம்தான் பேபி ஜான். இந்தப் படத்தில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி என பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் இன்று அதாவது டிசம்பர் 25ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது. படத்தில் சல்மான் கான் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் சல்மான் கான் வாங்கிய சம்பளம் குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
தெறி படம் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியாகி தமிழ்நாட்டில் மட்டும் இல்லாமல், தென்னிந்திய சினிமாவில் மாபெரும் ஹிட் அடித்த படம். இந்தப் படத்தினை இயக்கிய அட்லீ, இந்தியில் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். மேலும் இந்தப் படத்தின் கதையை ஹிந்தி ஆடியன்ஸ்க்கு ஏற்ற வகையிலும் கொஞ்சம் மாற்றி அமைத்துள்ளனர். இதன் காரணமாகவே சல்மான் கான் கதாபாத்திரம் இந்தப் படத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

சல்மான் கான் இந்தப் படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கின்றார் என்ற தகவல் துளியும் கசியாமலும், சந்தேகம் எதுவும் வராமலும் படக்குழுவினர் பார்த்துக் கொண்டனர். மேலும் படத்தினைப் பார்த்த ரசிகர்கள் சல்மான் கான் இண்ட்ரோ காட்சியை இணையத்தில் வேகமாக பகிர்ந்து வருகின்றனர். இதுமட்டும் இல்லாமல், படத்தினைப் பார்த்த, ரசிகர்கள் சல்மான் கானை கொண்டாடி வருகின்றனர்.

பேபி ஜான்: சல்மான் கானை திரையில் பார்த்த ரசிகர்கள், ' தென்னிந்திய இயக்குநர்களுக்குத்தான் ஒரு சூப்பர் ஸ்டாரை எப்படி பயன்படுத்தவேண்டும் எனத் தெரிந்துள்ளது. தெறி படத்தில் கேமியோ கதாபாத்திரங்கள் எதுவுமே இல்லை என்றாலும், இந்தி ரசிகர்களுக்காக அதை வடிவமைத்து சிறப்பாகக் கொடுத்துள்ளார்கள் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

சல்மான் கான்: இந்தப் படத்தில் சல்மான் கான் நடிக்க எவ்வளவு சம்பளம் வாங்கியிருப்பார் என்ற கேள்வி பலருக்கும் எழுந்து வருகின்றது. குறிப்பாக, ஒரு படத்தில் நடிக்க ரூபாய் 100 கோடிகளில் இருந்து ரூபாய் 150 கோடிகள் வரை சம்பளமாகப் பெறும் சல்மான் கான் இந்தப் படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்க எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்ற கேள்வி பலருக்கும் உள்ளது.

சம்பளம்: ஆனால், இந்தப் படத்தில் நடிக்க சல்மான் கான் சம்பளம் எதுவுமே வாங்கவில்லை என்றுதான் கூறப்படுகின்றது. மேலும் அட்லீயின் அடுத்த படத்தில் சல்மான் கான் மற்றும் கமல்ஹாசன் நடிக்கவுள்ளனர். இந்தப் படத்தினை பான் இந்தியா படமாக அட்லீ உருவாக்கவுள்ளதால், சல்மான் கான் இந்தப் படத்தில் நட்புக்காக சம்பளம் எதுவும் வாங்காமல் நடித்துக் கொடுத்துள்ளார் என கூறப்படுகின்றது. மேலும் சல்மான் கானின் கேமியோ கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால் அவர் செம குஷியாக இருப்பதாக கூறப்படுகின்றது.



Click it and Unblock the Notifications











