SalmanKhan: லால் சலாம் மொய்தீன் பாய் லுக்கில் சல்மான் கான்... கண்ணாடி திருப்புனா ஆட்டோ ஓடுமா மொமண்ட்

அபுதாபி: பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் நடித்த கிசி கா பாய் கிசி கி ஜான் திரைப்படம் கடந்த மாதம் 21ம் தேதி வெளியானது.

ரம்ஜான் ஸ்பெஷலாக ரிலீஸான இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் சல்மான் கானுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது.

 Salman Khan: Salman Khans new beard look for IIFA 2023 is trending now

இந்நிலையில், அபுதாபியில் நடைபெற்று வரும் IIFA 2023 விழாவில் சல்மான் கான் கலந்துகொண்டார்.

இதற்காக புதிய லுக்கில் அபுதாபி சென்றிருந்த சல்மான் கானின் போட்டோ வைரலாகி வருகிறது.

மொய்தீன் பாய் லுக்கில் சல்மான் கான்

பாலிவுட்டில் கடந்த 30 ஆண்டுகளாக மாஸ் ஹீரோவாக வலம் வருகிறார் சல்மான் கான். பாலிவுட் ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படும் சல்மான் கான், தற்போது டைகர் 3 படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக அவரது நடிப்பில் வெளியான கிசி கா பாய் கிசி கி ஜான் திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்தப் படம் ரம்ஜான் ஸ்பெஷலாக கடந்த மாதம் 21ம் தேதி வெளியாகியிருந்தது.

தமிழில் அஜித் நடிப்பில் சூப்பர் ஹிட்டான வீரம் படத்தின் இந்தி ரீமேக்காக கிசி கா பாய் கிசி கி ஜான் உருவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அபுதாபியில் நடைபெற்ற IIFA 2023 விழாவில் சல்மான் கான் கலந்துகொண்டார். முக்கியமாக இந்நிகழ்ச்சியை அபிஷேக் பச்சன், விக்கி கெளஷலுடன் இணைந்து சல்மான் கானும் தொகுத்து வழங்கினார். அப்போது சல்மான் கானின் புதிய லுக் பலரது கவனத்தையும் ஈர்த்தது.

எப்போதுமே கிளீன் ஷேவ் உடன் மீசை, தாடி எதுவும் இல்லாமல் இருப்பதே சல்மான் கானின் லுக். ஆனால், இந்த விழாவில் மெல்லிய ஆட்டுத் தாடியுடன் கலந்துகொண்டார் சல்மான் கான். இது பார்ப்பதற்கு லால் சலாம் படத்தின் ரஜினியின் மொய்தீன் பாய் லுக் போல இருப்பதாக கோலிவுட் ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதேபோல், பாலிவுட் ரசிகர்களும் சல்மான் கான் லுக்கை கலாய்த்து வருகின்றனர்.

முன்னதாக பதான் படத்தில் ஷாருக்கானின் ஹேர் ஸ்டைலை பார்த்து கிசி கா பாய் கிசி கி ஜான் படத்திற்காக தனது ஹேர் ஸ்டைலை மாற்றியிருந்தார் சல்மான் கான். இப்போது அடுத்ததாக லால் சலாம் ரஜினிகாந்த் போல, தாடியுடன் மாஸ் காட்டியுள்ளார். இந்தப் போட்டோவை தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ள சல்மான் கான், கேப்ஷன் எதுவும் போடவில்லை. இதனையடுத்து சல்மானின் நியூ லுக் போட்டோ ட்ரெண்டாகி வருகிறது.

கெட்டப் மாற்றினால் படம் ஓடும் என்ற நம்பிக்கையில் சல்மான் கான் இப்பட் தாடி வைத்துள்ளாரா என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். நல்ல கதைகளை தேர்ந்தெடுக்காமல் கெட்டப்பை மட்டும் மாற்றிக்கொண்டே இருந்தால் எப்படி படம் ஓடும் எனவும் கேட்டு வருகின்றனர். கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் ஜீவா என்ற காமெடியைப் போலாகிவிட்டது சல்மான் கானின் நிலை எனவும் கமெண்ட்ஸ்கள் பறக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X