எனக்கு ஹீரோயினாக தீபிகா வேண்டாம்: சல்மான் கான் கறார்
மும்பை: என் படத்திற்கு தீபிகா படுகோனே வேண்டாம் என நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.
அடுத்தடுத்து ஹிட் படங்கள் கொடுத்து பாலிவுட்டின் நம்பர் ஒன் நாயகியாக இருப்பவர் தீபிகா படுகோனே. அவர் தற்போது ஷாருக்கானுடன் சேர்ந்து ஹேப்பி நியூ இயர் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவரை நாயகியாக்க வேண்டாம் என்று ஒரு ஹீரோ கூறியுள்ளார்.

சல்மான்
சூரஞ் பர்ஜாத்யாவின் படத்தில் சல்மான் கான் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஏற்ற ஜோடியை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

தீபிகா
சல்மானுக்கு ஜோடியாக முன்னணி நடிகையான தீபிகா படுகோனேவை நடிக்க வைக்கலாம் என்று நினைத்து ஹீரோவிடம் அது குறித்து தெரிவித்துள்ளனர்.

வேண்டாம்
தீபிகா மிகவும் பிசியான நாயகி. என் படத்திற்கு பிசியாக இருக்கும் நடிகை வேண்டாம் என்று சல்மான் தெரிவித்துவிட்டாராம். முன்னதாக நாயகி தேர்வில் தான் தலையிடுவது இல்லை என்று சல்மான் கூறியிருந்தார்.

புதுமுகங்கள்
சில காலமாக சல்மான் தனது படங்களில் புதுமுக நடிகைகளை நடிக்க வைத்து வருகிறார். அப்படி சல்மான் கானால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் தான் சினேகா உல்லல், ஜரீன் கான், சோனாக்ஷி சின்ஹா, டெய்சி ஷா ஆகியோர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கும்?
சூரஜ் பர்ஜாத்யா இயக்கத்தில் தான் நடிக்கும் படத்திலும் புதுமுக நடிகையை ஹீரோயினாக்குமாறு கூறுவாரோ சல்மான்? பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











