அந்த 'அழகு தெய்வத்தின்' மனைவியா இவர்?

மும்பை: மும்பையின் ஹாட் பேச்சு இப்போது இதுதான்... அதாவது ருமேனியாவைச் சேர்ந்த டிவி நடிகையும், தொகுப்பாளினியுமான ஐயுலியா வன்டூரைத்தான் 'பாடி காட்' சல்மான் கான் கட்டிக்கப் போவதாக பேசிக் கொள்கிறார்கள்.

இந்தப் பேச்சுக்குக் காரணம் இல்லாமல் இல்லை. வன்டூருடன், அடிக்கடி மும்பையில் உள்ள ஒரு ஸ்டார் ஹோட்டலுக்கு பப்ளிக்காகவே வந்து போகிறாராம் சல்மான்.

அழகில் அசத்தலாக இருக்கிறார் வன்டூர். இவரும் சல்மானும் டீப்பாக காதலிப்பதாகவும் கூறப்படுகிறது.

வயசானாலும் பேச்சலர்தான்

வயசானாலும் பேச்சலர்தான்

பாலிவுட்டில் ரொம்ப காலமாக பேச்சலராகவே இருப்பவர் சல்மான்கான்தான். அவர் செட் ஆட்களெல்லாம் கல்யாணம், குழந்தை, குட்டி என்று செட்டிலாகி விட்டார்கள்.

காதலிக்க நேரமுண்டு

காதலிக்க நேரமுண்டு

ஆனால் சல்மான் கான் காதலிலேயே மூழ்கிக்கிடக்கிறாரே தவிர கல்யாணத்தைப் பற்றி பேசவே மாட்டேன் என்கிறார்.

சோமி தொடங்கி கத்ரீனா வரை

சோமி தொடங்கி கத்ரீனா வரை

சல்மான் காதல் வலையில் சிக்கியவர்கள் எண்ணிக்கை எக்கச்சக்கம். சோமி அலி, அசாருதீன் மனைவி சங்கீதா பிஜ்லானி, அபிஷேக் பச்சன் மனைவி ஐஸ்வர்யா ராய், கத்ரீனா கைப் ஆகியோரை முதலில் காதலித்தவர் சல்மான்தான்.

இப்போது வன்டூர்

இப்போது வன்டூர்

இப்போது வன்டூரிடம் வந்து நிற்கிறார் சல்மான். ஆனால் இதற்கு முந்தைய காதல்களைப் போல இல்லாமல், வன்டூருடனான காதலை அவர் பப்ளிக்காகவே வெளிப்படுத்தி வருவதாக தெரிகிறது. இதன் மூலம் அவர் வன்டூரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

2 வருஷமாக

2 வருஷமாக

வன்டூரை சல்மான் கான் கடந்த 2 வருடமாகவே காதலித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ருமேனியாவிலிருந்து அடிக்கடி மும்பைக்கு வந்து விடுகிறார் வன்டூர். பந்த்ராவில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில்தான் தங்குவார். அவர் இங்கு வரும்போதெல்லாம் தினசரி ஹோட்டலுக்கு வந்து ஆஜராகி விடுவாராம் சல்மான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X