சல்மான் கானுடன் Billi Billi ஆட்டம் போட்ட பூஜா ஹெக்டே... ஓஹோ விசயம் அப்படி போகுதா..?
மும்பை: பாலிவுட் சூப்பர் சல்மான் கான் தற்போது டைகர் 3 திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
முன்னதாக ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் படத்தில் கேமியோ ரோலில் என்ட்ரி கொடுத்து அசத்தினார்.
இன்னொரு பக்கம் கிசி கா பாய் கிசி கி ஜான் படத்தில் பூஜா ஹெக்டேவுடன் நடித்து முடித்துள்ளார்.
இந்தத் திரைப்படம் ரம்ஜான் ஸ்பெஷலாக ரிலீஸாகவுள்ள நிலையில், சல்மான் கானுடன் பூஜா ஹெக்டே ஆட்டம் போட்ட வீடியோ ட்ரெண்டாகி வருகிறது.

சல்மான் கான் - பூஜா ஹெக்டே ரொமான்ஸ்
பாலிவுட் சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் சல்மான் கான், தற்போது 'கிசி கா பாய் கிசி கி ஜான்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். ஃப்ர்ஹத் சம்ஜி இயக்கியுள்ள இந்தப் படத்தில் சல்மான் கான் ஜோடியாக 'பீஸ்ட்' நாயகி பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும், தெலுங்கு நடிகர்கள் வெங்கடேஷ், ஜெகபதி பாபு, பூமிகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கிசி கா பாய் கிசி கி ஜான் படத்தில் இருந்து 'நையோ லக்டா' என்ற பாடல், காதலர் தின ஸ்பெஷலாக வெளியாகியிருந்தது. இதில், சல்மான் கானும் பூஜா ஹெக்டேவும் ரொமான்ஸில் கலக்கியிருந்தனர்.

ட்ரெண்டாகும் பில்லி பில்லி டீசர்
ஆக்ஷன் ஜானரில் உருவாகியுள்ள 'கிசி கா பாய் கிசி கி ஜான்' படத்திற்கு சல்மான் கான் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில், இந்தப் படத்தில் இருந்து செகண்ட் சிங்கிளான 'பில்லி பில்லி' பாடலின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. சல்மான் கானும் பூஜா ஹெக்டேவும் க்யூட்டாக ஆட்டம் போடும் இந்தப் பாடலின் டீசர் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது. அதேபோல், கிசி கா பாய் கிசி கி ஜான் திரைப்படம் ரம்ஜான் ஸ்பெஷலாக வெளியாவதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.

பாலிவுட் பக்கம் சென்ற பூஜா ஹெக்டே
மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்த முகமூடி படத்தில் அறிமுகமான பூஜா ஹெக்டே, அதன்பின்னர் டோலிவுட் பக்கம் கவனம் செலுத்தினார். ராம் சரணுடன் ரங்கஸ்த்தலம், பிரபாஸுடன் ராதே ஷ்யாம் படங்களில் நடித்த பூஜா ஹெக்டே தமிழில் பீஸ்ட் திரைப்படத்தில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்தார். ஆனால், ராதே ஷ்யாம், பீஸ்ட் படங்களுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இதனையடுத்து தற்போது பாலிவுட் பக்கம் கவனம் செலுத்தி வருகிறாராம் பூஜா ஹெக்டே.

சல்மான் கான் கொடுத்த வாய்ப்பு
இந்நிலையில், ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் கடந்தாண்டு இறுதியில் வெளியான சர்க்கஸ் படத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு சல்மான் கானும் தனது கிசி கா பாய் கிசி கி ஜான் படத்தில் ஜோடியாக நடிக்க வாய்ப்புக் கொடுத்தார். கிடைத்த சான்ஸை கெட்டியாக பிடித்துக்கொண்ட பூஜா ஹெக்டே, சல்மான் கானுடன் செம்மையாக ரொமான்ஸ் செய்து அவரது குட்புக்கில் இடம் பிடித்துவிட்டாராம். அதனால் இனி தொடர்ந்து இந்தி படங்களில் பூஜா ஹெக்டே நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அன்லக்கி நடிகை என்ற பெயருக்கும் முடிவுகட்ட திட்டமிட்டுள்ளாராம்.

கம்பேக் கொடுக்கும் சல்மான் கான்
இதனிடையே சிரஞ்சிவீ நடிப்பில் கடந்தாண்டு வெளியான 'காட்ஃபாதர்' படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து மாஸ் காட்டியிருந்தார் சல்மான் கான். அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் ஷாருக்கான் நடிப்பில் ரிலீஸான பதான் படத்திலும் ஏஜென்ட் டைகராக கேமியோ ரோலில் என்ட்ரி கொடுத்து ஆக்ஷனில் மிரட்டியிருந்தார். விரைவில் அவரது டைகர் 3 திரைப்படமும் வெளியாகவுள்ளது. சில வருடங்களாக ஹிட் கொடுக்க முடியாமல் திணறும் சல்மான் கான் கிசி கா பாய் கிசி கி ஜான் படத்தில் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கிசி கா பாய் கிசி கி ஜான் படத்தில் இருந்து தற்போது வெளியான பில்லி பில்லி பாடலின் டீசர் டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. இந்தப் பாடலின் முழுமையான வீடியோ நாளை ரிலீஸாகிறது.


Click it and Unblock the Notifications











