குழந்தையிடம் முரட்டுத்தனம்.. பாதுகாவலரை ஓங்கி அறைந்த சல்மான் கான்.. வைரலாகும் வீடியோ!
மும்பை: மும்பை தியேட்டர் ஒன்றில் தனது பாதுகாவலரை மக்கள் முன்பு நடிகர் சல்மான் கான் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்கோபத்திற்கு பேர் போனவர் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான். ரசிகர்கள் ஆகட்டும், பொதுமக்கள் ஆகட்டும் சட்டென கோபப்பட்டு சண்டை போட்டுவிடுவது அவரது வழக்கம். சில நேரங்களில் மோதலில் ஈடுபட்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இந்நிலையில், நேற்று அவரது பாரத் படம் ரிலீசாகியது. கேத்ரினா கபூர், தபு உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்தை அலி அப்பாஸ் இயக்கி இருந்தார். படத்தின் புரோமோசனுக்காக மும்பையில் உள்ள தியேட்டர் ஒன்றிற்கு நேரில் வந்திருந்தார் நடிகர் சல்மான்.

ரசிகர்கள் கூட்டம்:
நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த சல்மானைக் காண ஏராளமான ரசிகர்கள் காத்திருந்தனர். அவர்கள் சல்மானுடன் செல்பி எடுக்க முயற்சித்தனர். அந்தக் கூட்டத்தில் ஏராளமான பெண்கள், சிறு குழந்தைகளும் இருந்தனர்.

முரட்டுத்தனம்:
அப்போது அவர்களை அருகில் செல்ல விடாமல், சல்மானின் பாதுகாவலர்கள் தடுக்க முயற்சித்தனர். சல்மான் கான் பேசிக் கொண்டிருந்த குழந்தை ஒன்றிடமும் அவர்கள் அதே போன்று முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர்.

பாதுகாவலருக்கு அறை:
இதனால் ஆத்திரமடைந்த சல்மான், தனது பாதுகாவலர் ஒருவரை கன்னத்தில் அறைந்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத அவர் அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவத்தை அங்கு கூடியிருந்த மக்களில் பலர் வீடியோவாக எடுத்தனர்.

கண்டனம்:
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. பாதுகாவலராகவே இருந்தாலும், சல்மான் எப்படி அவரை கை நீட்டி அடிக்கலாம் என இந்த சம்பவம் பற்றி நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











