'வீரம்' இந்தி ரீமேக்கில் தம்பிகளுடன் நடிக்கும் சல்மான் கான்?
மும்பை: அஜீத் குமார் நடித்த வீரம் படத்தின் இந்தி ரீமேக்கில் சல்மான் கான் தனது தம்பிகளுடன் நடிக்கவிருக்கிறார் என்று கூறப்படுகிறது.
அஜீத் நடிப்பில் ஹிட்டான வீரம் படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் உரிமையை ப்ரிதீஷ் நந்தி வாங்கியுள்ளார். அவர் அஜீத் குமார் கதாபாத்திரத்தில் நடிக்குமாறு சல்மான் கானை அணுகியுள்ளாராம்.
மேலும் தமன்னா கதாபாத்திரத்தில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

அஜீத்
வீரம் படத்தில் அஜீத் நான்கு தம்பிகளின் பாசக்கார அண்ணனாக நடித்திருந்தார். தம்பிகளுக்காகவே வாழும் அண்ணனாக நடித்திருந்தார்.

சல்மான்
வீரம் இந்தி ரீமேக்கில் சல்மான் கான் அஜீத் கதாபாத்திரத்தில் நடிக்க அவரது தம்பிகளான சுஹைல் மற்றும் அர்பாஸ் கான் ஆகியோர் படத்திலும் தம்பிகளாக நடிக்கவிருக்கிறார்களாம்.

ரீமேக் மன்னன்
சல்மான் கான் தமிழ், தெலுங்கு படங்களை இந்தியில் ரீமேக் செய்து நடிப்பதில் ஆர்வம் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் நடித்த வாண்டட், ரெடி, பாடிகார்ட், ஜெய் ஹோ மற்றும் நடிக்கும் கிக் ஆகியவை ரீமேக் படங்கள் ஆகும்.

முடிவாகவில்லை
சல்மான் மற்றும் அவரது தம்பிகள் வீரம் ரீமேக்கில் நடிப்பது பேச்சு அளவில் தான் உள்ளது. இன்னும் முடிவாகவில்லை. முடிவானவுடன் அதை உங்களுக்கு தெரியப்படுத்துவோம்.

பொருத்தம்
வீரம் ரீமேக்கில் சல்மான் கான் நடித்தால் அது அவருக்கு மிகவும் பொருந்தும் என்று பலர் கூறுகின்றனர். சல்மான் நிஜ வாழ்க்கையில் பாசக்கார அண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவா
வீரம் படத்தை இயக்கிய சிவாவே இந்தி ரீமேக்கையும் இயக்குவார் என்று கூறப்படுகிறது. வீரம் படத்தை ரீமேக் செய்ய பாலிவுட்டில் அழைப்பதாக சிவா முன்பு தெரிவித்திருந்தார்.

குடும்ப படம்
வீரம் படம் குடும்பத்துடன் பார்த்து மகிழும் வகையில் இருந்தது. சிறுவர்கள் அஜீத் போன்று வேட்டி, சட்டை அணிந்து தியேட்டர்களுக்கு வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











