ஒர்க்அவுட் வீடியோ வெளியிட்ட சூப்பர் ஸ்டார்: இந்த மனுசனுக்கு வயசே ஆகாதா?
மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் கான் வெளியிட்டுள்ள ஒர்க்அவுட் வீடியோக்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு 53 வயதாகிறது. இன்னும் பாலிவுட்டின் முன்னணி ஹீரோவாக உள்ளார். ரம்ஜான் பண்டிகை ஸ்பெஷலாக வெளியான அவரின் பாரத் படம் ஹிட்டாகியுள்ளது.
ரம்ஜான் பண்டிகை சல்மான் கானுக்கு ராசியான நாளாக உள்ளது. அதனாலேயே அவரின் படங்களை ரம்ஜான் அன்று வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.
ஒர்க்அவுட்
சல்மான் கான் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுபவர். இரவு 2 மணி ஆனாலும் சரி ஒர்க்அவுட் செய்யாமல் தூங்க மாட்டார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சல்மான் கான் தான் ஒர்க் அவுட் செய்தபோது எடுத்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவிட்டது.
வீடியோ
சல்மான் கான் தான் பிளெக்சிபிளாக இருப்பதை காட்டும் வீடியோ ஒன்றையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் இவருக்கு வயசே ஆகாதா, வாலிபர்களுக்கே டஃப் கொடுக்கிறாரே என்று வியந்து தெரிவித்துள்ளனர்.
சல்மான் கான்
சல்மான் கான் தனது படங்களில் ஒரு காட்சியிலாவது சட்டையை கழற்றிவிட்டு தனது ஜிம் பாடியை காட்டுவார். அதை பார்த்து ஓ மை காட், வாவ், சூப்பர் என்று ரசிகர்களும், ரசிகைகளும் அசந்து போவார்கள். இந்நிலையில் அவர் தனது டாப்லெஸ் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு ரசிகைகளை திக்குமுக்காட வைத்துவிட்டார். சல்மான் கானுக்கு வயதாகிவிட்டது, தொப்பை போட்டுவிட்டது என்று விமர்சனங்கள் எழுந்த நிலையில் அவர் இப்படி வீடியோக்கள், புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

சக்சஸ் பார்ட்டி
பாரத் படம் வெற்றி பெற்றதையடுத்து பார்ட்டி கொடுத்துள்ளார்கள். மும்பையில் உள்ள மெஹபூப் ஸ்டுடியோஸ் வளாகத்தில் பார்ட்டி நடக்க சல்மான் கானோ தபாங் 3 படப்பிடிப்பில் பிசியாக இருந்துள்ளார். இடைவேளையின்போது சல்மான் பாரத் பார்ட்டி நடந்த இடத்திற்கு வந்து நான்கு குலாப்ஜாமூன்களை சாப்பிட்டுள்ளார். உணவுக் கட்டுப்பாட்டில் இருக்கும் அவர் இனிப்பு வகைகளை தொட்டுக் கூட பார்ப்பது இல்லை. இந்நிலையில் அவர் குலாப்ஜாமூன்களை சாப்பிட்டதை பார்த்த பாரத் படக்குழுவினர் அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர்.


Click it and Unblock the Notifications











