Tiger 3 Teaser: ஷாருக்கான் மட்டுமில்லை நானும் இருக்கேன்.. சல்மான் கானின் டைகர் 3 டீசர் எப்படி?

மும்பை: பாலிவுட் இந்த ஆண்டு மீண்டும் வெறித்தனத்தை காட்டி வருகிறது. தென்னிந்திய சினிமாக்கள் கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட் தலையிலேயே ஏறி குட்டிக் கொண்டிருந்த நிலையில், இந்த ஆண்டு ஷாருக்கானின் பதான், ஜவான் என பேக் டு பேக் 2 படங்கள் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் 1000 கோடி வசூல் சாதனையை சாத்தியமாக்கின.

இந்நிலையில், அடுத்ததாக இந்த ஆண்டு தீபாவளிக்கு தனது பங்கிற்கு ஒரு 1000 கோடி படத்தை இறக்க தயாராகி விட்டார் சல்மான் கான்.

Salman Khan Tiger 3 Teaser confidently says for another 1000 crore box office movie confirmed

கடைசியாக பூஜா ஹெக்டேவுடன் இணைந்து வீரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்து பலத்த அடி வாங்கிய நிலையில், மணிஷ் ஷர்மா இயக்கத்தில் உருவாகி உள்ள டைகர் 3 படத்தின் டீசரே சும்மா தெறிக்கவிடுகிறது.

ஸ்பை யூனிவர்ஸ்: லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் போல பாலிவுட்டில் யஷ் ராஜ் சோப்ராவின் ஸ்பை யூனிவர்ஸ் படங்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. ஷாருக்கானின் பதான் படத்தைத் தொடர்ந்து டைகர் 3 படமும் ஸ்பை யூனிவர்ஸ் படமாக உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

சல்மான் கான் சாகசம்: கடந்த சில ஆண்டுகளாக சல்மான் கானின் படங்கள் சொதப்பிய நிலையில், மீண்டும் தனது ஹிட் ஃபார்முலாவான டைகர் படத்தின் 3ம் பாகத்தில் நடிக்க ஆரம்பித்தார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கத்ரீனா கைஃப் நடித்துள்ளார். தற்போது வெளியான டீசரில் ஒவ்வொரு ஃபிரேமும் ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் அளவுக்கு செம மாஸாகவும் கிளாஸாகவும் அமைந்துள்ளன. தேச துரோகி என முத்திரை குத்தப்படும் டைகர் தேசத்தை காப்பாற்ற என்ன செய்யப் போகிறார் என்பது தான் இந்த படத்தின் கதையும் என்பதை டீசர் ரிவீல் செய்துள்ளது.

தீபாவளி சரவெடி: ஸ்லோவாக சென்று கொண்டிருந்த டீசரில் திடீரென அந்த ஜீப்பில் எகிறி குதித்து துப்பாக்கிகளை வைத்து எதிரிகளை சுட்டு வீழ்த்தும் அந்த காட்சியில் இருந்து தீபாவளி சரவெடி ஆரம்பமாகிறது. இந்த ஆண்டு இன்னொரு 1000 கோடி வசூலை பாலிவுட்டுக்கு எடுத்து வைங்க என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

ஷாருக்கான் கேமியோ: இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியான பதான் படத்தில் சல்மான் கானின் கேமியோ இருந்ததை போலவே டைகர் 3 படத்தில் ஷாருக்கானின் பதான் லுக் கேமியோ இருக்கும் என தெரிகிறது. ஆனால், டீசரில் ஷாருக்கானை படக்குழுவினர் ரிவீல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தீபாவளி கிட்ட நெருங்கும் போது அதை வெளியிட்டு புரமோஷனை மேலும், டபுள் மடங்காக மாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X