»   »  3 புள்ள பெத்துக்கணும் ஆனால் திருமணம் வேண்டாம்: சல்மான் கான் வில்லங்க பேச்சு

3 புள்ள பெத்துக்கணும் ஆனால் திருமணம் வேண்டாம்: சல்மான் கான் வில்லங்க பேச்சு

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தனக்கு 2 முதல் 3 குழந்தைகள் பெற்றுக் கொள்ள ஆசை உள்ளது என்றும் ஆனால் திருமணம் செய்து கொள்வது சந்தேகமே என்றும் பாலிவுட் நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் சல்மான் கானின் தம்பிகள், தங்கைகள் எல்லாம் திருமணம் செய்து குழந்தைகள் பெற்றுவிட்டனர். கடைசி தங்கை அர்பிதாவும் கர்ப்பமாக உள்ளார். 50 வயதாகும் சல்மான் மட்டும் இன்னும் சிங்கிளாகவே உள்ளார்.

சல்மான் வாழ்வில் பல காதலிகள் வருகிறார்கள் போகிறார்கள். ஆனால் யாரும் அவர் வாழ்வில் தங்கிவிடுவது இல்லை.

திருமணம்

திருமணம்

சல்மான் கானுக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் திருமணம் பற்றி பேச்சு எடுத்தால் மட்டும் நைசாக நழுவிவிடுவார்.

குழந்தைகள்

குழந்தைகள்

சல்மான் எப்பொழுது திருமணம் செய்து கொள்வீர்கள் என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் எனக்கு 2 முதல் 3 குழந்தைகள் பெற்றுக் கொள்ள ஆசை உள்ளது. ஆனால் திருமணம் செய்வது சந்தேகம் தான் என்றார்.

வில்லங்கம்

வில்லங்கம்

முன்பு ஒரு முறை திருமணம் பற்றி கேட்டபோதும், குழந்தைகள் பெற்றுக் கொள்வேன் ஆனால் திருமணம் செய்ய மாட்டேன் என்றார் சல்மான் என்பது குறிப்பிடத்தக்கது.

கத்ரீனா

கத்ரீனா

காதலர் ரன்பிர் கபூரை பிரிந்த பிறகு தனது முன்னாள் காதலரான சல்மான் கானுடன் நெருக்கம் காட்டி வருகிறார் கத்ரீனா கைஃப். இதைப் பார்த்த பாலிவுட்காரர்கள் சல்மானும், கத்ரீனாவும் மீண்டும் சேர்ந்துவிட்டதாக பேசிக் கொள்கிறார்கள்.

English summary
Salman Khan wants to have 2-3 children but he is doubtful about marriage.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil