சும்மா விட மாட்டேன்.. ரசிகர்களுக்கு திடீர் எச்சரிக்கை விடுத்த சல்மான் கான்.. என்ன ஆச்சு தெரியுமா?

மும்பை: சல்மான் கானின் ராதே திரைப்படம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஒடிடி தளத்தில் வெளியானது.

249 ரூபாயை செலுத்தி இந்த படத்தை ஜீ சினி பிளெக்ஸில் pay per view முறையில் காணலாம்.

ஒடிடி தளத்தில் வெளியான இந்த படம் வெளியான சில நிமிடங்களிலேயே பைரஸி தளங்களில் சக்கைப் போடு போட ஆரம்பித்துள்ள நிலையில், தனது ரசிகர்களுக்கு அதிரடி வார்னிங் கொடுத்துள்ளார் நம்ம மோஸ்ட் வான்டட் பாய்.

ரம்ஜானுக்கு ராதே

ரம்ஜானுக்கு ராதே

பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான், திஷா பதானி, ஜாக்கி ஷெராஃப், பரத், மேகா ஆகாஷ் மற்றும் ரந்தீப் ஹூடா நடிப்பில் ரம்ஜானுக்கு வெளியான படம் ராதே. தியேட்டர்கள் மூடப்பட்டு உள்ள நிலையில், ஜீ சினி பிளெக்ஸில் 249 ரூபாய் டிக்கெட்டில் இந்த படம் ஒடிடியில் வெளியானது.

மொக்கை படம்

மொக்கை படம்

சல்மான் கானின் ஆக்ஷன் படமான ராதே படத்திற்கு ஐஎம்டிபி உள்பட அனைத்து விமர்சன தளங்களிலும் மொக்கை படம் என்கிற விமர்சனங்களே எழுந்துள்ளன. ஆனால், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை இந்த படம் பெற்றுள்ளதாகவும் பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹெச்.டி. பிரின்ட்

ஹெச்.டி. பிரின்ட்

தியேட்டர்களில் வெளியாகும் படங்கள் முதல் நாளில் தியேட்டர் பிரின்ட்களாக எரிச்சல் ஊட்டும் சத்தத்துடன் பைரஸி தளங்களில் முதல் ஷோ முடிந்த உடனே வெளியாகி வந்தன. ஆனால், ஒடிடியில் வெளியாகும் படங்கள் வெளியிட்ட சில நிமிடங்களிலேயே பைரஸி தளங்களில் ஹெச்.டி. தரத்துடன் வெளியாகி வருகின்றன. சல்மான் கானின் ராதே படமும் பைரசிக்கு இரையாகி உள்ளது.

வசூல் வேண்டாம்

வசூல் வேண்டாம்

கொரோனா இரண்டாம் அலை காரணமாக தினமும் மக்கள் செத்து மடியும் சூழலில் யாரும் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் கூட வெளியிட வேண்டாம் என மறுத்து வரும் நிலையில், ரசிகர்களுக்காக இந்த படத்தை வெளியிடுகிறேன் எனக் கூறிய சல்மான் கான், இந்த படத்தின் வசூல் ஜீரோவாக இருந்தாலும் பரவாயில்லை என்றார். ஆனால், தற்போது பைரஸி தளங்களில் படம் வெளியாகி உள்ள நிலையில், ரசிகர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரூ.249 ஒன்லி

ரூ.249 ஒன்லி

குடும்பத்துடன் ராதே படத்தை ஒரு முறை பார்க்க வெறும் ரூ. 249 மட்டுமே செலுத்தினால் போதும் என ரசிகர்களுக்காக மிகவும் மலிவான விலையில் இந்த படத்தை வெளியிட்டுள்ளேன். ஆனால், அதையும் மீறி பைரஸி தளங்களில் இந்த படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு பெரிய ஆபத்து காத்துக் கொண்டிருக்கிறது என எச்சரிக்கை விடுத்துள்ளார் சல்மான் கான்.

சும்மா விடமாட்டேன்

சும்மா விடமாட்டேன்

சைபர் கிரைம் போலீசுக்கு இது தொடர்பாக புகார்கள் போயுள்ளன. பைரஸி தளங்களில் படத்தை பார்க்க வேண்டாம். அப்படி மீறி பார்ப்பவர்களை நான் சும்மா விட மாட்டேன். நீங்க மிகப் பெரிய ஆபத்தை சந்திக்க நேரிடும் என மிரட்டியுள்ள சல்மான் கானை முதல்ல நல்ல படத்தை கொடுங்க என நெட்டிசன்கள் பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X