உங்க மியூசிக் சுமார் தான்.. ஏ.ஆர்.ரஹ்மானை கலாய்த்த சல்மான் கான்..டிரெண்டிங் வீடியோ !

சென்னை : பாலிவுட்டில் சுஷாந்த் சிங்கின் மரணத்தைத் தொடர்ந்து பல்வேறு பழைய பாலிவுட் பேட்டிகளும் சினிமா நிகழ்ச்சிகளின் வீடியோக்களும் சில நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் பரவலாக பரப்பப்பட்டு வருகிறது.

Recommended Video

Ilaiyaraja insults Oscar awardee A.R.Rahman • வைரலாகும் விடியோ | Nepotism

இந்நிலையில் சுஷாந்த் சிங்கின் மரணத்தில் சல்மான்கானிற்கும் சம்மந்தம் இருக்கிறது என பலராலும் குற்றம்சாட்டப்பட்டு வரும் நிலையில் அதற்கான வழக்குகளும் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சுஷாந்த் சிங்குக்கு ஆதரவாக ஒவ்வொரு வீடியோக்களாக அவரது ரசிகர்கள் வெளியிட்டு வரும் நிலையில் தற்போது ஏ ஆர் ரஹ்மான் மற்றும் சல்மான் கான் பழைய வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது

பழைய பேட்டி

பழைய பேட்டி

இப்போது நம் அனைவரும் கொரானா லாக்டவுன் நேரத்தில் வீட்டில் அடைந்து கிடக்கும் வேளையில் தற்போது பல பழைய படங்கள், பழைய பேட்டிகள், பழைய சினிமா நிகழ்ச்சிகள் என நாம் பார்த்துக்கொண்டு வருகிறோம் அந்த வகையில் பல திரைப்பட பிரபலங்களின் பல பழைய வீடியோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. அப்படி ஒரு வீடியோதான் தற்போது இணையதளத்தை கலக்கி கொண்டு பலராலும் பகிரப்பட்டு ட்ரண்டாகி வருகிறது.

சர்ச்சைக்குரிய

சர்ச்சைக்குரிய

சமீபத்தில் நெப்போலியன் மற்றும் ராதிகா போன்றோரின் பேட்டிகள் வைரலாகி வந்தநிலையில், தற்போது ஏ ஆர் ரஹ்மான் மற்றும் சல்மான் கான் ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்று பலராலும் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

ஹாலிவுட் துறையிலும்

ஹாலிவுட் துறையிலும்

இந்தியாவில் ஏ ஆர் ரஹ்மானின் இசைக்கு மயங்காத ஆட்கள் இல்லை அப்படி இங்கு பலரும் இவரது இசைக்கு அடிமையாக உள்ளனர். மேலும் ஹாலிவுட் துறையிலும் உலகம் முழுவதிலும் பல கோடி ரசிகர்களைக் கொண்டுள்ளார் ஏ ஆர் ரஹ்மான்.

பெருமைக்குரிய

பெருமைக்குரிய

இவ்வாறு தமிழ் உட்பட பல மொழிகளில் தனது இசையால் அனைவரையும் மயங்க வைத்து வரும் இவர் ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக ஆஸ்கர் விருது பெற்று உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை உலகரிய செய்துள்ளார்.

விளையாட்டாக

விளையாட்டாக

இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு ஏ ஆர் ரஹ்மான் பணியாற்றிய படத்திற்கான இசைவெளியீட்டு விழா ஒன்றில் ஏ ஆர் ரஹ்மான் மற்றும் சல்மான்கான் கலந்து கொண்டனர். அப்போது பேசத் தொடங்கிய சல்மான்கான் அருகிலிருந்த ஏ ஆர் ரஹ்மானை நோக்கி விளையாட்டாக உங்க மியூசிக் எல்லாம் சுமார் ரகம் தான் கூறியிருந்தார்.

புன்னகையால் பதில்

புன்னகையால் பதில்

அந்த வீடியோவில் சல்மான்கான் பேசும்போது, ஏ ஆர் ரஹ்மானின் இசை மிகவும் சுமாராகத்தான் இருக்கும் என்று கூற அதற்கு ஏ ஆர் ரஹ்மான் வழக்கம்போல தனது சிறு புன்னகையுடன் பதிலளித்திருந்தார். அதன் பின்னர் சல்மான்கான் ஏ ஆர் ரஹ்மானுக்கு கை குலுக்கும் போது அதனை நிராகரிக்கும் விதமாக ஏ ஆர் ரஹ்மான் தனது பேண்ட் பாக்கெட்டுக்குள் கைகளை விட்டு கொண்டார்.

இசையமைப்பீர்கள்

இசையமைப்பீர்கள்

பின்னர் வலுக்கட்டாயமாக சல்மான் கான் அவரது கையை பிடித்து குலுக்கினார். அதேபோல மற்றொரு வீடியோவில் ஏ ஆர் ரஹ்மானிடம் சல்மான்கான் படத்திற்கு நீங்கள் எப்போது இசையமைப்பீர்கள் என நிருபர் ஒருவர் கேட்டதற்கு, எனக்கு பிடிக்கும்படி நல்ல படங்களில் அவர் நடிக்கும்போது அவருக்காக நான் இசையமைப்பேன் என்று பதிலளித்திருந்தார்.

கண்டிப்பாக இணைவோம்

கண்டிப்பாக இணைவோம்

மேலும் இருவரும் ஏற்கனவே யுவராஜ் என்ற படத்தில் இணைந்து பணியாற்றி உள்ளோம் மீண்டும் சரியான தருணத்தில் நல்ல படம் அமையும்போது கண்டிப்பாக இணைவோம் என ஏ ஆர் ரஹ்மான் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார் இவ்வாறு சர்ச்சைகளை கிளப்பி உள்ள இந்த இரண்டு வீடியோவும் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X