இன்னும் 3 நாளில் ஹீரோ ரிலீஸ்.. சிவகார்த்திகேயனை வாழ்த்திய சல்மான் கான்!
சென்னை: தபங் 3 படத்தின் புரொமோஷனுக்காக சென்னை வந்துள்ள சல்மான் கான், இன்னும் 3 நாளில் வெளியாகவுள்ள ஹீரோ படம் வெற்றிபெற சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
கே.ஜே.ஆர் நிறுவனம் தயாரிப்பில் வெளியாகவுள்ள சிவகார்த்திகேயனின் ஹீரோ மற்றும் கே.ஜே.ஆர். நிறுவனம் சார்பில் தமிழில் ரிலீசாகவுள்ள தபங் 3 ஆகிய இரண்டு படங்களும் வரும் டிசம்பர் 20ம் தேதி திரைக்கு வருகிறது.
இந்நிலையில், தபங் 3 படத்தின் புரொமோஷனுக்காக வந்த சல்மான் கான் நடிகர் சிவகார்த்திகேயனை சந்தித்து வாழ்த்தியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
எஸ்.கே மீட்ஸ் எஸ்.கே
சல்மான் கான் மீட்ஸ் சிவகார்த்திகேயன் என்பதை சுருக்கமாக எஸ்.கே மீட்ஸ் எஸ்.கே என ட்விட்டரில் ஹாஷ்டேக் உருவாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர். கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் வெளியிட்ட அந்த வீடியோவில் இரு நடிகர்களும் பரஸ்பரம் மற்றவர்களின் படங்கள் வெற்றி பெற வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கின்றனர்.

தபங் 3
அமீர்கான், ஷாருக்கான் படங்கள் தமிழில் வெளியாகும் அளவுக்கு சல்மான் கான் படங்கள் தமிழில் அதிகமாக வெளியானது கிடையாது. ஆனால், பிரபுதேவா இயக்கத்தில் உருவாகியுள்ள தபங் 3 படம் இந்த முறை தமிழ் மொழியிலும் டப் செய்யப்பட்டு வரும் டிசம்பர் 20ம் தேதி வெளியாகிறது.
ஹீரோ புக்கிங்
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்ஷன், அர்ஜுன், அபய் தியோல், இவானா, ரோபோ சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள ஹீரோ படம் வரும் டிசம்பர் 20ம் தேதி வெளியாகிறது. ஹீரோ படத்தின் டிக்கெட் புக்கிங் இன்று முதல் ரிசர்வ் செய்யப்படுகிறது.
வேற லெவல் புரொமோஷன்
சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பாலிவுட் நடிகர் சல்மான் கானை வைத்து வெளியிட்ட கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ், தொடர்ந்து அந்த படத்திற்கான புரொமோஷனை வேற லெவலில் செய்து வருகிறது. இந்நிலையில், இறுதி புரொமோஷனாக பாலிவுட் நடிகர் சல்மான் கானுடன் சிவகார்த்திகேயனை உரையாட வைத்துள்ளனர்.

ஹீரோ ஹிட்டாகுமா?
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே பிரம்மாண்ட புரொமோஷனுடன் ஹீரோ சிவகார்த்திகேயனுக்கு எதிர்பார்த்த ஹிட் கொடுக்குமா? என்ற கேள்வி கோலிவுட் ரசிகர்களிடையே எகிறியுள்ளது. விஷாலுக்கு இரும்புத்திரை எனும் ஹிட் கொடுத்த பி.எஸ். மித்ரன் கையில் தான் எல்லாம் உள்ளது என்றும் சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











