Sikandar Teaser: ஏ.ஆர். முருகதாஸ் இயக்கம்.. சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ டீசர் எப்படி இருக்கு?

மும்பை: பாலிவுட் நடிகர்கள் தென்னிந்திய இயக்குநர்களை குறிப்பாக தமிழ் சினிமா இயக்குநர்களை ரொம்பவே நம்பி தொடர்ந்து இணைந்து பணியாற்றி வருகின்றனர். அமீர்கான் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கஜினி படத்தில் நடித்து மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை கொடுத்தார். கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படமும் 1100 கோடி வசூலை ஈட்டியது.

சல்மான் கான் ஏற்கனவே பிரபுதேவா இயக்கத்தில் நடித்துள்ள நிலையில், தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்து வரும் சிக்கந்தர் படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. சல்மான் கானின் 59வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்றே சிக்கந்தர் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் மன்மோகன் சிங்கின் மறைவு காரணமாக சிக்கந்தர் டீசர் ரிலீஸ் தேதியை இன்று தள்ளி வைத்தனர்.

salman khan ar murugadoss sikandar

நேற்று இரவு முகேஷ் அம்பானி நடிகர் சல்மான் கானின் பிறந்தநாள் பார்ட்டியை பிரம்மாண்டமாக நடத்த ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் அதில் பங்கேற்ற காட்சிகள் எல்லாம் வெளியாகி வரும் நிலையில், சிக்கந்தர் டீசர் எப்படி இருக்கு என்பது குறித்து இங்கே காணலாம் வாங்க..

சிக்கந்தர் டீசர் ரிலீஸ்: பாலிவுட்டின் முன்னணி நடிகர் சல்மான் கான் நேற்று தனது 59வது பிறந்தநாளை கொண்டாடினார். பிறந்தநாளை முன்னிட்டு நேற்று காலை 11 மணியளவில் சிக்கந்தர் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது சிக்கந்தர் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. சஜித் நதியத்வாலா தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான், ராஷ்மிகா மந்தனா, காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ள சிக்கந்தர் படத்தின் டீசர் தாறுமாறாக உள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

டீசர் எப்படி இருக்கு?: துப்பாக்கிகள் நிறைய கண்ணாடி பெட்டிக்குள் கண்காட்சி போல வைக்கப்பட்டு இருக்கும் நிலையில், அங்கே ஏகப்பட்ட போர் வீரர்களின் சிலைகளும் இடம்பெற்றுள்ளன. அந்த இடத்துக்கு தனி ஒருவனாக கையில் எந்தவொரு ஆயுதமும் இன்றி வரும் சல்மான் கானை திடீரென சிலைகளாக இருக்கும் நபர்கள் அட்டாக் செய்ய, அவர்களின் துப்பாக்கிகளை வாங்கியே அவர்களை துவம்சம் செய்யும் டீசரை தற்போது ஏ.ஆர். முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ரம்ஜான் ரிலீஸ்: சல்மான் கான் தொடர்ந்து தனது படங்களை ரம்ஜான் பண்டிகையை டார்கெட் செய்தே வெளியிட்டு வருகிறார். அடுத்த ஆண்டு ஈகைத் திருநாளுக்கு சல்மான் கானின் சரவெடியான ஆக்‌ஷன் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிக்கந்தர் டீசரில் பெரிதாக புதிய விஷயங்கள் இல்லை என்றும் வெறும் ஆக்‌ஷன் பில்டப் காட்சி மட்டுமே டீசராக வெளியாகி இருக்கிறது என்றும் ட்ரோல்களும் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X