Tiger 3 Box Office: 4 நாளில் நாக்கவுட் ஆன சல்மான் கான்.. அதல பாதாளத்தில் டைகர் 3 வசூல்?
மும்பை: தலைகீழாகத்தான் குதிப்பேன் என சல்மான் கான் தனது படத்தை கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடாமல் தீபாவளி நாளான நவம்பர் 12ம் தேதி வெளியிட்ட நிலையில், அதன் வசூல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல் அதல பாதாளத்திற்கே சென்று விட்டதாக பாலிவுட் டிராக்கர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

யஷ் ராஜ் சோப்ரா தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் மனீஷ் சர்மா இயக்கத்தில் சல்மான் கான், கத்ரீனா கைஃப் நடிப்பில் வெளியான டைகர் 3 படம் யஷ் ராஜ் சோப்ரா யூனிவர்ஸ் படமாக உருவாகி உள்ளது.
இந்த படத்தில் கேமியோ ரோலில் ஷாருக்கான் மற்றும் ஹ்ரித்திக் ரோஷன் அதிரடி என்ட்ரி கொடுத்தும் படம் பெரிதாக வசூல் சாதனை படைக்கவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.
300 கோடி பட்ஜெட்: சல்மான் கான் சம்பளமே 150 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறுகின்றனர். இந்நிலையில், 300 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ள டைகர் 3 திரைப்படம் பல வெளிநாடுகளில் கடுமையான சூழல்களை சந்தித்து படமாக்கப்பட்டாலும் கடந்த சில வருடங்களாக சொதப்பி வரும் சல்மான் கானை நம்பி ரசிகர்கள் பெரிதாக அவர் படத்தை பார்க்க ஆர்வம் காட்டவில்லை என்றே தெரிகிறது.
முதல் நாள் வசூல்: தீபாவளி பண்டிகை நாளான முதல் நாளில் சல்மான் கானின் டைகர் 3 திரைப்படம் 94 கோடி ரூபாய் வசூல் செய்ததாக யஷ் ராஜ் நிறுவனம் அறிவித்தது. ஆனால், அதை விட குறைவான வசூலை தான் அந்த படம் ஈட்டியிருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் டிராக்கரான சுமித் கடேல் தெரிவித்துள்ளார்.

300 கோடி லைஃப் டைமே கஷ்டம்: 300 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ள சல்மான் கானின் டைகர் 3 படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வெளியான நிலையில், படம் இதுவரை 240 கோடி வசூல் செய்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால், 169 கோடி தான் வசூல் செய்துள்ளது என்றும் வாழ்நாள் வசூலே 300 கோடி வருவது ரொம்ப கஷ்டம் என்றும் வெளிநாடுகளிலும் இந்த படம் சொல்லிக் கொள்ளும் படி ஓடவில்லை எனக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











