எக்ஸ் கேர்ள் ஃபிரெண்டுக்கு பார்ட்டியில் முத்தம் கொடுத்த சல்மான் கான்.. பூஜா ஹெக்டேவும் பங்கேற்பு!
மும்பை: பாலிவுட்டின் எவர் க்ரீன் முரட்டு சிங்கிளாக விளங்கும் நடிகர் சல்மான் கானின் 57வது பிறந்தநாள் விழா நேற்று இரவு முதலே களைகட்டத் தொடங்கியது. ஷாருக்கான், தபு, சோனாக்ஷி சின்ஹா உள்ளிட்ட பல பாலிவுட் பிரபலங்கள் சல்மான் கான் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்டனர்.
அதில் குறிப்பாக, தற்போதைய ரூமர் கேர்ள் ஃபிரெண்ட் நடிகை பூஜா ஹெக்டே முதல் முன்னாள் காதலி சங்கீதா பிஜ்லானி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டது தான் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
சல்மான் கான் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஏகப்பட்ட ரொமான்ஸ் நிகழ்வுகளும் அரங்கேறிய வீடியோக்களும் சோஷியல் மீடியாவில் தாறுமாறாக டிரெண்டாகி வருகின்றன.

57 வயசு
1965ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதி பிறந்த பாலிவுட் நடிகர் சல்மான் கானின் 57வது பிறந்தநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் சல்மான் பாய்க்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று இரவு சல்மான் கானின் தங்கை அர்பிதா கான் பிரம்மாண்ட பர்த்டே பார்ட்டியை நடத்தி உள்ளார்.

ஷாருக்கான் கொடுத்த முத்தம்
சினிமாவில் போட்டி என்றால் நட்பு ரீதியாக பாலிவுட்டில் கான் நடிகர்கள் எப்போதுமே ஒருவருக்கு ஒருவர் சினிமாவிலும் சரி நிஜத்திலும் சரி உதவியாகவும் விழாக்களிலும் பங்கேற்பது வழக்கம். சல்மான் படங்களில் கேமியோவாக நடனம் ஆடியுள்ள ஷாருக்கான் சல்மான் கானின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு அவரது நெற்றியில் முத்தம் கொடுத்தது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

ரூமர் கேர்ள் ஃபிரெண்ட் பூஜா ஹெக்டே
சல்மான் கான் உடன் 'Kisi Ka Bhai Kisi Ki Jaan' படத்தில் நடித்து வரும் நடிகை பூஜா ஹெக்டே நேற்று இரவு நடைபெற்ற பிறந்தநாள் பார்ட்டியில் செம அழகாக உடை அணிந்து கலந்து கொண்டார். சல்மான் கானுக்கு ஜோடியாக நடித்து வரும் பூஜா ஹெக்டேவுக்கும் சல்மானுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாக பாலிவுட்டில் பெரும் பேச்சு நிலவி வருகிறது.

எக்ஸ் கேர்ள் ஃபிரெண்டும்
பூஜா ஹெக்டே மட்டுமின்றி சல்மான் கானின் முன்னாள் காதலியான சங்கீதா பிஜ்லானியும் சல்மான் கானின் 57வது பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்டார். பார்ட்டியில் கேக் வெட்டிக் கொண்டாடிய சல்மான் கான் சங்கீதா பிஜ்லானியின் நெற்றியில் முத்தமிட்ட வீடியோ காட்சிகளும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளன.


Click it and Unblock the Notifications











