சும்மாவே அவரு கோவக்காரரு... தேவையா? செல்ஃபி எடுக்க முயன்றவர் போனை பறித்த சல்மான் கான். வைரல் வீடியோ

By

பானாஜி: செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞரின் செல்போனை நடிகர் சல்மான் கான் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நம் இளைஞர்களுக்கு செல்ஃபி மோகம் தலைவிரித்தாடுகிறது. எங்கு சென்றாலும் செல்ஃபி எடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.

ரயில் முன் நின்று செல்ஃபி எடுப்பது, வன விலங்குகள் முன் நின்று செல்ஃபி எடுப்பது, உயரமான கட்டிடத்தில் ஏறி நின்று செல்ஃபி எடுப்பது என பசங்களின் அட்டகாசம் பரபரப்பாகி வருகிறது.

ஓடும் ரயில் முன்

ஓடும் ரயில் முன்

இதன் காரணமாக பலர் காயமடைந்த மற்றும் உயிரிழந்த சம்பவங்களும் நடந்துள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன், மேற்கு வங்கத்தில் ஓடும் ரயில் முன்பு செல்ஃபி எடுக்க முயன்ற மாணவி உயிரிழந்தார். நாயுடன் செல்ஃபி எடுக்க முயன்ற பெண்ணை அது கடித்துக் குதறி 40 தையல் போடப்பட்ட சம்பவம் அர்ஜென்டினாவில் நடந்துள்ளது.

மோகம் குறையவில்லை

மோகம் குறையவில்லை

இருந்தும் செல்ஃபி மோகம் குறையவில்லை. கடந்த சில வருடங்களுக்கு முன் விழா ஒன்றில் நடிகர் சிவகுமாருடன் செல்ஃபி எடுக்க முயன்றவரின் போனை அவர் தட்டிவிட்டார். இந்த சம்பவம் பரபரப்பானது. பின்னர் உடைந்த அந்த போனுக்கு பதிலாக அவர் வேறு போனை வாங்கிக்கொடுத்தார்.

கண்டிப்பு

கண்டிப்பு

அனுமதி இல்லாமல் இப்படி செல்ஃபி எடுப்பதை பலர் கண்டித்து வருகின்றனர். அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள் மற்றும் பிரபலங்களை கண்டால், செல்ஃபி எடுக்க துணிந்து விடுகின்றனர். இந்நிலையில் பிரபல இந்தி நடிகர் சல்மான் கான் இன்று காலை, கோவாவுக்கு வந்தார்.

கோபமான சல்மான்

தனது பாடிகார்ட்களுடன் வந்த அவர் விமானத்தில் இருந்து இறங்கி விமான நிலையத்துக்கு வெளியே நடந்துகொண்டிருந்தார். அப்போது அவருக்கு முன்னால் சென்ற இளைஞர் ஒருவர் செல்ஃபி எடுக்க முயன்றார். இதனால் கோபமான நடிகர் சல்மான் கான், அவரது செல்போனை பறித்துவிட்டு வேகமாகச் சென்றார்.

விமான நிலைய ஊழியர்

விமான நிலைய ஊழியர்

இதனால் அந்த இளைஞர் அதிர்ச்சி அடைந்தார். இதை ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. விசாரணையில் இப்படி செல்ஃபி எடுத்தவர் விமான நிலைய ஊழியர் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக புகார் ஏதும் வரவில்லை என்று கோவா விமான நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகர் எகோஸ்கர் தெரிவித்துள்ளார்.

செல்ஃபி எடுப்பவர்களிடம் இப்படி கோபமாக நடந்துகொள்வது சல்மான் கானுக்கு புதிதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X