ரஜினி, சல்மானை பகைத்துக் கொண்ட தீபிகா படுகோனே?
மும்பை: நடிகை தீபிகா படுகோனே பெரிய நடிகர்களான ரஜினிகாந்த், சல்மான் கானை பகைத்துக் கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
அண்மை காலமாக தீபிகா படுகோனே நடித்த இந்தி படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றன. இந்நிலையில் அவர் கோலிவுட்டில் ஒரு ரவுண்ட் வர நினைத்து ரஜினியின் கோச்சடையான் படத்தில் நடித்தார்.
ஆனால் அவரது எதிர்பார்ப்பு புஸ்ஸாகிவிட்டது. படத்தை பார்த்தவர்கள் தீபிகாவை கிண்டலடித்தனர்.

கோச்சடையான்
கோச்சடையானில் அனிமேஷனில் தன்னை அழகாக காட்டவில்லை, தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லை என்று நினைத்த தீபிகா ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் சௌந்தர்யா மீது கடுப்பாகி விளம்பர நிகழ்ச்சிகளை தவிர்த்தார்.

ரஜினி
தீபிகா கோச்சடையான் விளம்பர நிகழ்ச்சிகளை புறக்கணித்தது ரஜினி மற்றும் சௌந்தர்யாவுக்கு வருத்தத்தை அளித்தது.

சல்மான்
ராஜ்ஸ்ரீ புரொடக்ஷன்ஸ் சல்மானை வைத்து எடுக்கும் படத்தில் நடிக்க தீபிகாவிடம் கேட்டுள்ளனர். அவர் அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார்.

குத்தாட்டம்
சல்மான் கான் நடிப்பில் வெளியாகவிருக்கும் கிக் இந்தி படத்தில் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட அழைத்தபோதும் மறுத்துவிட்டார் தீபிகா.

கரண் ஜோஹார்
பாலிவுட்டின் பிரபல இயக்குனரான கரண் ஜோஹாரின் ஷுத்தி படத்தில் நடிக்க கேட்டதற்கும் மறுத்துவிட்டார் தீபிகா.

தலைக்கணம்
அடுத்தடுத்து படங்கள் ஹிட்டானதால் வெற்றி போதை தீபிகாவின் தலைக்கேறிவிட்டது. அதனால் அவர் இப்படி நடந்து கொள்கிறார் என்று பாலிவுட்டில் கிசுகிசுக்கிறார்களாம்.


Click it and Unblock the Notifications











