ரூ.200 கோடியை வசூலித்துவிட்டு ரூ.300 கோடியை நோக்கி செல்லும் சல்மானின் 'கிக்'
மும்பை: சல்மான் கான் நடிப்பில் வெளியான கிக் படம் இந்தியாவில் மட்டும் ரூ.200 கோடி வசூல் செய்துள்ளது.
ரம்ஜான் பண்டிகை வந்தாலே சல்மான் கான் ரசிகர்கள் குஷியாகிவிடுவார்கள். ரம்ஜான் அன்று வெளியாகும் சல்மான் கானின் படத்தை பார்த்து பாக்ஸ் ஆபீஸ் வசூலை ரசிகர்கள் கண்டமேனிக்கு ஏற்றிவிடுவார்கள்.
படத்தில் கதை இருக்கோ, இல்லையோ படத்தை ஹிட்டாகிவிடுவார்கள்.

தில்லாலங்கடி
தெலுங்கில் வெளியான கிக் கோலிவுட்டில் தில்லாலங்கடி என்ற பெயரில் ரிலீஸானது. தெலுங்கில் கிடைத்த வெற்றி தமிழ்நாட்டில் கிடைக்கவில்லை.

கிக்
ரீமேக் மன்னனான சல்மான் தெலுங்கு கிக் படத்தை அதே பெயரில் இந்தியில் ரீமேக் செய்ய வைத்து அதில் நடித்தார். படம் ரம்ஜான் பண்டிகையையொட்டி ரிலீஸ் செய்யப்பட்டது.

ரூ. 100 கோடி
கிக் படம் ரிலீஸான நான்கே நாட்களில் ரூ. 100 கோடியை வசூலித்துவிட்டது. இத்தனைக்கும் விமர்சகர்கள் கிக் படத்தை பற்றி நல்லவிதமாக எதுவும் கூறவில்லை.

யார் கேட்டால்?
விமர்சகர்களின் விமர்சனம் எல்லாம் யாருக்கு வேண்டும் என்று ரசிகர்கள் அதை எல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் தியேட்டருக்கு சென்று வாய் வலிக்க விசில் அடித்து படத்தை பார்த்து வருகிறார்கள்.

ரூ.200 கோடி
ரசிகர்களின் இந்த அன்பால் கிக் படம் ரிலீஸான 11வது நாளில் அதாவது இன்று இந்தியாவில் மட்டும் ரூ.200 கோடியை வசூலித்துவிட்டது.

சாதனை
சல்மானின் படம் இந்தியாவில் மட்டும் ரூ. 200 கோடியை வசூலித்துள்ளது என்றால் அது கிக் தான். இதன் மூலம் சல்மான் கானின் படம் புதிய சாதனை படைத்துள்ளது.

ரூ.300 கோடி
சல்மான் கான் படத்திற்கு ரூ.200 கோடி வசூல் எல்லாம் போதாது நாங்கள் மேலும் படத்தை பார்த்து வசூலை ரூ.300 கோடி ஆக்கியே தீர்வோம் என்று ரசிகர்கள் துடிப்புடன் இருக்கிறார்கள். அதனால் கிக் ரூ.300 கோடியை நிச்சயம் வசூலித்துவிடும் என்று பலர் தற்போதே சத்தியம் செய்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











