சல்மான் கானின் 'லவ்ராத்திரி'யை ரிலீஸ் செய்ய விட மாட்டோம்: விஸ்வ இந்து பரிஷத்
Recommended Video

மனம் திறந்த தீபீகா | ல்வ் ராத்திரிக்கு பிரச்சினை- வீடியோ
மும்பை: சல்மான் கான் தயாரித்துள்ள லவ் ராத்திரி படத்திற்கு பிரச்சனை கிளம்பியுள்ளது.
பாலிவுட் நடிகர் சல்மான் கான் தனது தங்கை அர்பிதாவின் கணவர் ஆயுஷ் சர்மாவை வைத்து லவ் ராத்திரி என்ற இந்தி படத்தை தயாரித்துள்ளார். இந்த படம் மூலம் ஆயுஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார்.
குஜராத் பின்னணியில் எடுக்கப்பட்டுள்ள இந்த படம் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படும் நேரத்தில் அக்டோபர் மாதம் 5ம் தேதி ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில் படத்தை வெளியிட விட மாட்டோம் என்று விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச தலைவர் ஆலோக் குமார் கூறியதாவது,
லவ் ராத்திரி படத்தில் நவராத்திரியை தவறாக காட்டியுள்ளனர். இது இந்துக்களின் மனதை புண்படுத்துவது போன்று உள்ளது. அதனால் லவ் ராத்திரி படத்தை இந்தியாவில் ரிலீஸ் செய்ய விட மாட்டோம் என்றார்.
Comments


Click it and Unblock the Notifications