»   »  ரிலீஸான மூன்றே நாட்களில் ரூ.100 கோடி வசூலித்த சல்மானின் பிரேம் ரத்தன் தன் பாயோ

ரிலீஸான மூன்றே நாட்களில் ரூ.100 கோடி வசூலித்த சல்மானின் பிரேம் ரத்தன் தன் பாயோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: சல்மான் கான் நடிப்பில் வெளியான பிரேம் ரத்தன் தன் பாயோ படம் ரிலீஸான மூன்றே நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது.

சூரஜ் பர்ஜாத்யா இயக்கத்தில் சல்மான் கான், சோனம் கபூர் உள்ளிட்டோர் நடித்த பிரேம் ரத்தன் தன் பாயோ படம் கடந்த 12ம் தேதி ரிலீஸானது. படம் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகியது.

Salman's Prem Ratan Dhan Payo collects Rs.100 crores in three days

படத்தை பார்த்த விமர்சகர்கள் பிரேம் ரத்தன் தன் பாயோவில் சல்மானை தவிர வேறு எதுவும் இல்லை. படத்தை பார்க்க மூளை அவசியமே இல்லை என்றனர். ஆனால் ரசிகர்களோ விமர்சனத்தை காதில் வாங்குவதாக இல்லை. நீங்கள் உங்கள் பங்கிற்கு விமர்சியுங்கள் நாங்கள் தியேட்டருக்கு சென்று படத்தை ஹிட்டாக்காமல் விட மாட்டோம் என்று உள்ளனர்.

இந்நிலையில் படம் ரிலீஸான மூன்றே நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது. சல்மான் நடிப்பில் வெளியாகி ரூ.100 கோடி வசூலை தாண்டிய படங்களி்ல இது ஒன்பதாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

சல்மான் அடுத்ததாக சுல்தான் படத்தில் நடிக்கிறார். அதற்காக அவர் தனது உடல் எடையை அதிகரித்துள்ளார்.

English summary
Salman Khan's Prem Ratan Dhan Payo has collected Rs. 100 crores within three days of it's release.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil