மகனின் லீலையால் தர்ம சங்கடத்தில் ஸ்ரீதேவியின் கணவர்
Recommended Video

மும்பை: அர்ஜுன் கபூர் செய்த காரியத்தால் சல்மான் கான் போனி கபூர் படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.
நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் சல்மான் கான் நோ என்ட்ரி 2 மற்றும் வாண்டட் 2 ஆகிய படங்களில் நடிப்பார் என்று செய்திகள் வெளியாகின.
இது குறித்து கேட்டபோது சல்மான் கானோ தான் போனி கபூர் தயாரிப்பில் நடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

அர்ஜுன்
போனி கபூரின் முதல் மனைவி மூலம் பிறந்த மகனான நடிகர் அர்ஜுன் கபூர் மீதுள்ள கோபத்தால் தான் சல்மான் கான் அந்த 2 படங்களில் நடிக்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

தொடர்பு
சல்மான் கானின் தம்பி அர்பாஸ் கானின் முன்னாள் மனைவி மலாய்க்காவுக்கும், அர்ஜுன் கபூருக்கும் இடையே தொடர்பு இருப்பதாக பாலிவுட்டில் பல காலமாக பேசப்படுகிறது. இந்த காரணத்தால் தான் மலாய்க்கா கணவரை பிரிந்துவிட்டதாகக் கூட பேச்சு கிளம்பியது. தனது தம்பியின் வாழ்க்கையில் விளையாடிய அர்ஜுன் மீது சல்மான் கடும் கோபத்தில் உள்ளார்.

கண்டிப்பு
மலாய்க்காவை பார்க்காதே, பேசாதே என்று போனி கபூர் கூறியும் அர்ஜுன் கண்டுகொள்ளவில்லை என்று விபரம் அறிந்தவர்கள் தெரிவித்தனர். அர்ஜுன் மீதுள்ள கோபத்தால் அவரின் தந்தையின் தயாரிப்பில் நடிக்க மறுக்கிறாராம் சல்மான்.

கோபம்
சல்மான் கான் யாரை வேண்டுமானாலும் மன்னிப்பார், ஆனால் தனது குடும்பத்தில் பிரச்சனை செய்பவர்களை மட்டும் ஒருபோதும் மன்னிக்கவே மாட்டார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். பொது நிகழ்ச்சிகளிலும் கூட சல்மானை பார்த்தால் அர்ஜுன் ஒதுங்கிவிடுவார்.

ஸ்ரீதேவி
சல்மான் கானுக்கு போனி கபூர் மீது எந்த கோபமும் இல்லை. ஸ்ரீதேவியின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட சல்மான் அவரின் உடலை பார்த்து கண் கலங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











