அஜீத், விஜய் ரசிகர்கள் மாதிரி ட்விட்டரில் மல்லுக்கட்டும் சல்லு, ஷாருக்கான் ரசிகர்கள்

By Siva

மும்பை: பாலிவுட்டை ஆள்வது யார் என்பது குறித்து நடிகர்கள் சல்மான் கான், ஷாருக்கான் ரசிகர்கள் இடையே ட்விட்டரில் மோதல் நடக்கிறது.

கோலிவுட்டில் விஜய்யும், அஜீத்தும் நாங்கள் எல்லாம் நண்பேன்டா என்று கூறினாலும் அவர்களின் ரசிகர்கள் மட்டும் அதை காது கொடுத்து கேட்பதே இல்லை. ட்விட்டரில் அவ்வப்போது மோதிக் கொள்வார்கள். இதே நிலை தான் பாலிவுட்டிலும்.

பாலிவுட்டில் உள்ள 3 கான்களுக்கு இடையே உள்ள பிரச்சனை உலகம் அறிந்தது. என்ன அதில் ஆமீர் கானுக்கும், சல்மான் கானுக்கும் ஒத்துப் போகும். சல்லு, ஆமீர் ஆகியோருக்கும் ஷாருக்கானுக்கும் ஏழாம் பொருத்தம் தான்.

நிர்வாண போஸ்டர்

நிர்வாண போஸ்டர்

ஆமீர் கானின் பி.க. பட நிர்வாண போஸ்டரை பார்த்த ஷாருக்கான் வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல் என்னுடைய ஹேப்பி நியூ இயர் படத்தில் நடித்தவர்கள் அனைவரும் சேர்ந்து நிர்வாணமாக போஸ் கொடுத்து விளம்பரம் தேடலாம் என்று இருக்கிறோம் என்று ஜோக்கடிக்க அது ஆமீரின் ரசிகர்களை கொதிப்படைய வைத்துவிட்டது.

ட்விட்டர்

ட்விட்டர்

பாலிவுட்டை ஆள்வது சல்மான், ஆமீர் கான் என்று அவர்களின் ரசிகர்கள் ட்வீட் மேல் ட்வீட் போட அதை பார்த்த ஷாருக் ரசிகர்கள் சும்மா இருப்பார்களா? பதிலுக்கு பாலிவுட்டை ஆள்வது ஷாருக்கான் என்று ட்வீட் செய்து அதை டிரெண்டாக விட்டுள்ளனர்.

நாள் கணக்கில்

நாள் கணக்கில்

இந்த ட்விட்டர் சண்டை ஒரு நாளில் முடிந்துவிடவில்லை. கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து நடக்கிறது. இன்று கூட ஒன்லி ஷாருக்கான் ரூல்ஸ் என்ற ஹேஷ்டாக் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

ரசிகர்கள் மட்டுமா?

ரசிகர்கள் மட்டுமா?

ரசிகர்கள் தான் இப்படி அடித்துக் கொள்கிறார்கள் என்றால் சல்மானும், ஷாருக்கானும் என் படம் பாக்ஸ் ஆபீ்ஸில் வசூலை அள்ளுகிறதா, உன் படம் அள்ளுகிறதா என்ற வசூல் கோதாவில் குதித்துள்ளனர்.

அப்போ கட்டிப்பிடித்தது

அப்போ கட்டிப்பிடித்தது

சல்மான் கானும், ஷாருக்கானும் இஃப்தார் நிகழ்ச்சியில் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக் கொண்டனர். அது எல்லாம் அந்த நிமிடம் தான் போல. கட்டிப்பிடி வைத்தியம் சல்லு, ஷாருக் விஷயத்தில் வேலை செய்யவில்லையே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X