பட டீஸர் அளவுக்கு தாறுமாறா வைரலான சல்மான் கானின் 'பர்சனல்' வீடியோ

By Siva

மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் கான் தனது தங்கையின் மகனுடன் சேர்ந்து ஓவியம் வரையும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

பாலிவுட் பிரபலங்கள் தங்கள் வீட்டு குட்டீஸ்களின் புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். இந்நிலையில் தன் அண்ணன் சல்மான் கான் தனது மகன் அகிலுடன் சேர்ந்து ஓவியம் வரையும் வீடியோவை அர்பிதா கான் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவை சல்மான் கான் ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து வருகிறார்கள்.

சல்மான் கான்

சல்மான் கானும், அகிலும் ஓவியம் வரையும் வீடியோவை அர்பிதா கான் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். மாமனும், மருமகனும் கொஞ்சிப் பேசி வரையும் அந்த வீடியோவை இதுவரை 1.7 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். மருமகன் அகிலுக்கு ஓவியம் வரைய கற்றுக் கொடுத்துள்ளார் சல்மான். ஒரு கட்டத்தில் சல்மான் தரையில் குப்புற படுத்துக் கொண்டு குழந்தை போன்று நகர்ந்ததை பார்த்து சோ ஸ்வீட் என்று அவருடைய ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

அகில்

அகில்

ஓவியம் வரையும் போது அகில் வழுக்கி விழ அதை பார்த்த ஒருவர் பதறியடித்து போய் சிறுவனை தூக்கச் சென்றார். ஆனால் சல்மானோ அகிலை ஊக்குவிக்க குழந்தை அதுவாக எழுந்ததுடன் சிரித்தது. சல்மானும், அகிலும் சேர்ந்து ஓவியம் வரைந்த வீடியோவை பார்த்த பலர் அசந்து போயுள்ளனர். தன் மகன் சல்மானுடன் இருக்கும்போது எல்லாம் வீடியோ, புகைப்படங்கள் எடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார் அர்பிதா.

பரிசு

சல்மான் கான் படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் ஓவியம் வரைவதை வழக்கமாக கொண்டுள்ளார். அவர் ஓவியங்கள் வரைந்து அதை ஏலத்தில் விட்டுள்ளார். சல்மான் நடிக்க வராமல் இருந்திருந்தால் முழுநேர ஓவியராகியிருப்பார். பஜ்ரங்கி பாய்ஜான் படத்தில் நடித்தபோது சல்மான் ஒரு ஓவியம் வரைந்து ஹீரோயின் கரீனா கபூருக்கு பரிசளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அகில்

அகில்

சல்மான் கான் தான் கலந்து கொள்ளும் சில நிகழ்ச்சிகளுக்கு கூட அகிலை அழைத்துச் செல்கிறார். தான் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கூட மருமகனை தூக்கிச் சென்றார் மாமு. சல்மான் கான் வாழ்வில் காதல் வந்தாலும் போனாலும் அவர் தன் குடும்பத்தார் மீது வைத்திருக்கும் பாசம் அனைவருக்கும் தெரியும். தங்கை அர்பிதாவின் திருமணத்தை பிரமாண்டமாக நடத்தி அனைவரையும் வியக்க வைத்தவர் சல்மான். அவருக்கு அர்பிதா என்றால் உயிர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X