மச்சான், அவளை உன் பட ஹீரோயினாக்கேன்: முன்னாள் காதலிக்கு வாய்ப்பு தேடும் ஹீரோ
மும்பை: ஆமீர் கானின் தக்ஸ் ஆப் இந்தோஸ்தான் படத்தில் கத்ரீனா கைஃபை ஹீரோயினாக போடுமாறு சல்மான் கான் பரிந்துரை செய்துள்ளார்.
பாலிவுட்டில் நுழைந்தபோது கத்ரீனா சல்மான் கானின் காதலியானார். அதன் பிறகே அவரது கெரியர் பிக்கப்பாகி முன்னணி நடிகையானார். வளர்ந்த பிறகு கத்ரீனா சல்மானை பிரிந்து நடிகர் ரன்பிர் கபூரிடம் சென்றார்.
தற்போது ரன்பிரையும் பிரிந்து தனியாக உள்ளார். புதுப் பட வாய்ப்புகளும் இல்லை.

சல்மான்
ரன்பிர் கபூரை பிரிவதற்கு முன்பு கத்ரீனா சல்மான் கானை சந்தித்து ஆலோசனை பெற்றுள்ளார். தற்போது அவர் சல்மான் கான் நடித்து வரும் டைகர் ஜிந்தா ஹை படத்தில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஷாருக்கான்
ஆனந்த் எல் ராய் ஷாருக்கானை வைத்து இயக்கும் புதுப் படம் ஒன்றில் கத்ரீனா ஒப்பந்தம் ஆகியுள்ளார். இது தவிர்த்து அவர் கையில் புதுப் படங்கள் எதுவும் இல்லை.

கத்ரீனா
ஆமீர் கான் ஆதித்யா சோப்ராவின் இயக்கத்தில் தக்ஸ் ஆப் இந்தோஸ்தான் என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் கத்ரீனாவை ஹீரோயினாக்குமாறு சல்மான் ஆமீர் கானிடம் பரிந்துரை செய்துள்ளார்.

ஆமீர்
கத்ரீனா ஏற்கனவே தூம் 3 படத்தில் ஆமீருடன் சேர்ந்து நடித்துள்ளார். ஏற்கனவே நடித்த நடிகையுடன் மீண்டும் நடிக்க ஆமீர் விரும்பவில்லை. தக்ஸ் ஆப் இந்தோஸ்தான் படத்தில் ஆலியா பட்டை நடிக்க வைக்க விரும்புகிறார் ஆமீர்.

பார்ப்போம்
கத்ரீனாவை ஒப்பந்தம் செய்வது ஆதித்யா சோப்ரா மற்றும் ஆமீர் கான் கையில் உள்ளது. நண்பர் சல்மானின் பரிந்துரையை ஏற்று ஆமீர் கத்ரீனாவுடன் மீண்டும் சேர்ந்து நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











