வார்த்தையைக் காப்பாத்திட்டாரு சல்மான்.. சனா கான் மகிழ்ச்சி
மும்பை: இந்தியில் சல்மான் கான் ஜோடியாக மெண்டல் என்ற படத்தில் நடித்துவரும் சனா கான், தான் கொடுத்த வாக்கை சல்மான் காப்பாற்றி விட்டதாக கூறியுள்ளார்.
'சிலம்பாட்டம்', மூலம் அறிமுகம் ஆனவர் சனாகான். 'ஆயிரம் விளக்கு', 'பயணம்' போன்ற படங்களில் இவரது நடிப்பு பேசப்பட்டது. தற்போது, இவர் தெலுங்கு, இந்தி படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

பாலிவுட்டில் திணறல்
ஏற்கனவே இந்தியில் ‘பாம்பே டு கோவா, ‘ஹல்லா போல் என ஒன்றிரண்டு படங்களில் நடித்திருந்தாலும் அங்குள்ள நடிகைகளின் போட்டிக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தார். இந்த சமயத்தில்தான் பாலிவுட் ஹீரோ சல்மான் கான் வடநாட்டு டிவியில் நடத்திவரும் ‘பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் சனா கான் பங்கேற்றார்.

சல்மானுக்கு புகழ்ச்சி
அப்போது முதல் சல்மானை புகழ்ந்த வண்ணம் இருந்தார். அதற்கு பலன் கிடைத்திருக்கிறது. சல்மான் கான் நடிக்கும் ‘மென்டல்‘ என்ற இந்தி படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். ‘இதில் கவுரவ வேடத்தில்தான் சனா நடிக்கிறார்? என பாலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

மென்டல் மூலம் நிறைவேறிய கனவு
இதுபற்றி சனாகான் கூறும்போது, ‘சல்மான் கானுடன் நடிக்க வேண்டும் என்பது எனது கனவு. அந்த கனவு ‘மென்டல் படம் மூலம் நிறைவேறி இருக்கிறது. பாலிவுட்டில் எனது திறமையை வெளிப்படுத்த சரியான வாய்ப்பு. ‘கவுரவ வேடத்தில் நடிக்கிறீர்களா? என்கிறார்கள்.

படம் முழுக்க வர்றேனே...
படம் முழுவதும் வரும் ஹீரோயின் வேடம்தான். படம் வரும்போது எனது வேடத்தை பார்ப்பவர்கள் ஆச்சர்யப்படுவார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் எனது திறமையை பார்த்து சல்மான் இந்த வேடத்தை கொடுத்துள்ளார்" என்றார்.
முன்பு இதுபோலவே, சிம்புவைப் பாராட்டி பேசி ‘சிலம்பாட்டம்' படத்தில் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தக் காலத்து சங்கப் புலவர்கள் போல, புகழ் பாடியே வாய்ப்பு பெறுபவர்களும் இந்தக் காலத்திலும் இருக்கத்தான் செய்கிறார்கள்...!


Click it and Unblock the Notifications











