சல்மான்கானால் தாங்க முடியாத அதிர்ச்சி.. மொத்த படமும் போச்சா.. அய்யோ ரசிகர்கள் ரொம்ப பாவம்
சென்னை: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடித்துள்ள சிக்கந்தர் திரைப்பம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. ரமலான் பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாவதால் சல்மான்கான் ரசிகர்கள் பெரும் ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்நிலையில், சிக்கந்தர் திரையில் ரிலீஸ் ஆவதற்கு முன்பே இணையத்தில் மொத்த படமூம் லீக் ஆனதால், சல்மான்கான் பெரும் அதிர்ச்சியில் இருக்கிறாராம்.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடித்திருக்கும் சிக்கந்தர் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புடன் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வசூல் ரீதியாகவும் பாக்ஸ் ஆபிஸ் கலெக்சனில் 50 கோடியை தொட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது, வருவதெல்லாம் நல்ல செய்தியாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், படக்குழுவினர் மிகுந்த அப்செட்டில் இருக்கின்றனராம். பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தை இப்படியா திருட்டுத்தனமாக இணையத்தில் லீக் செய்வது என அவரது ரசிகர்கள் கொந்தளிக்கின்றனர்.

சிக்கந்தர் படம் லீக்: ரமலானை கிராண்ட் செலிப்ரேஷனாக மாற்ற நினைத்த சல்மான்கானுக்கு இப்படி ஒரு இடியைவா தலையில் இறக்குவது. நேற்று மா்லையே சிக்கந்தர் படத்தினை திருட்டுத்தனமாக லீக் செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால், ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் அல்லாமல் படக்குழுவினரே அப்செட்டில் இருக்கின்றனர். சுமார் 200 கோடி பொருட்செலவில் பிரம்மாண்டமாக இப்படத்தை எடுத்து முடித்திருக்கின்றனர். படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாக ரசிகர்கள் ரெக்கார்டு படைத்துவிட்டனர். முன்பதிவில் இப்படம் உலகளவில் 50 கோடியை தாெட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், படம் இணையத்தில் லீக் ஆனதால் பாக்ஸ் ஆபிஸை பாதிக்கும் என கூறப்படுகிறது.
சிக்கந்தர் முழு படமும் பைரஸி தளத்தில் லீக் ஆகியுள்ளதாம். இதனால், ரசிகர்கள் மட்டும் சினிமா துறையினரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது முதல் முறை அல்ல கபாலி, ஆர்ஆர்ஆர், டாக்டர், துருவ் விக்ரம் நடித்த ஆதித்யா வர்மா உள்ளிட்ட பல படங்கள் இதே பிரச்னையை சந்தித்திருக்கின்றன. இன்று படம் முதல் காட்சி வெளியாகி ரசிகர்களும் ரிவியூவ் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். கஜினி படத்திற்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் பிரம்மாண்ட படம் சிக்கந்தர். முன்னதாக மெளனகுரு படத்தினை இந்தியில் சோனாக்சி சின்ஹாவை வைத்து ரீமேக் செய்திருந்தார். இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

சிக்கந்தர் கை கொடுக்குமா: சல்மான் கான் கடைசியாக நடித்த படம் டைகர் 3 அப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. படமும் வந்த ஒரே வாரத்தில் தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்டது. ஷாருக்கான் படங்கள் அனைத்தும் 1000 கோடி வசூலை எட்டியிருக்கிறது. ஆனால், 100 கோடியை தாண்ட சல்மான்கான் படாதபாடு படுகிறார் என கிண்டல் செய்ய தொடங்கினர். மிகவும் நம்பிக்கையுடன் சிக்கந்தர் படத்தை சல்மான்கான் நம்பியிருக்கிறார். அந்த கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்கின்றனர் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











