'பார்ட்டிக்கு கூப்பிடுங்க.. ஜோக் சொல்றோம்' வெளிப்படையாகக் கேட்ட ஹீரோயினை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

By

மும்பை: பிரபல கிளாமர் ஹீரோயின் வெளியிட்டுள்ள ஹாட் போட்டோஸ் வைரலாகி வருகின்றன.

Recommended Video

SHORT HAIR SWEETIES| HEROINES WITH SHORT HAIR| FILMIBEAT TAMIL

பிரபல இந்தி டிவி நடிகை சலோனி சோப்ரா. எம்.டிவி சேனலில் ஒளிபரப்பான கேர்ள்ஸ் ஆன் டாப் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் இவர்.

சல்மான் கானின் ரேஸ் 3 படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், ஸ்க்ரீவ்ட் அப் என்ற தொடரிலும் நடித்தார்.

பாலியல் குற்றச்சாட்டு

பாலியல் குற்றச்சாட்டு

ஹாலிவுட்டை தாக்கிய மீ டூ விவகாரம் பாலிவுட்டில் பரபரப்பான போது, இவரும் புகார் கூறினார். இந்திய சினிமா மற்றும் தொலைக்காட்சி இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் சஜித் கான் மேல் பாலியல் குற்றச்சாட்டை வெளியிட்டார். தனுஶ்ரீ தத்தா, நானா படேகர் மீது கூறிய புகாரை அடுத்து இதுவும் அப்போது பாலிவுட்டில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

ஸ்பெஷல் போட்டோ ஷூட்

ஸ்பெஷல் போட்டோ ஷூட்

இவர் தனது இன்ஸ்டாகிராமில் ஓவர் ஹாட் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அரைகுறை ஆடைகளோடு இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்க்க ஏராளமான ரசிகர்கள் வெயிட்டிங். இதற்காக ஸ்பெஷல் போட்டோ ஷூட் நடத்துகிறார். உள்ளாடை அணியாமல், வெறும் சட்டையை மட்டும் அணிந்தபடி, சமீபத்தில் இவர் வெளியிட்ட போட்டோஸ் ரசிகர்களை அதிர வைத்தது.

அதிரடி கிளாமர்

அதிரடி கிளாமர்

இதற்கு ரசிகர்கள் கண்டபடி கமென்ட் அடித்து வந்தனர். இந்நிலையில் இப்போது மற்றொரு அதிரடி கிளாமர் போட்டோவை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதற்கு கேப்ஷனாக, நல்ல ஜோக் சொல்லுங்க, இந்த நாளை சிறப்பாகத் தொடங்க வேண்டும் என்று கூறியுள்ளார். ரசிகர்கள் தாறுமாறாக கலாய்த்துள்ளனர்.

வேற லெவல்ல இருக்கீங்க

வேற லெவல்ல இருக்கீங்க

சிலர், கடி ஜோக்குகளை பதிவு செய்துள்ளனர். அதில் சிலவற்றுக்குப் பதிலளித்துள்ளார் சலோனி. மற்றபடி வழக்கம் போல ரசிகர்கள், அவரை அப்படி இப்படி என்று வர்ணித்துள்ளனர். அழகை புகழ்ந்துள்ளனர். உங்களைப் போல யாருமே இல்லை, நீங்க செம ஹாட், அருமை, அடடா, ஸ்டன்னிங், வேற லெவல்ல இருக்கீங்க என்று பாராட்டுகளை குவித்துள்ளனர். சிலர் இப்படி உடை அணியலாமா? என கேட்டுள்ளனர்.

என்னை கூப்பிடுங்க

என்னை கூப்பிடுங்க

இதையடுத்து இன்னும் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ள சலோனி, இன்றிரவு எனக்கு பார்ட்டி இருக்கிறது. ஆனால் யாரும் அழைக்கப்படவில்லை என்று கூறியுள்ளார். இந்த போட்டோஸும் செம கிளாமராக இருக்கிறது. இதற்கும் ரசிகர்கள் சரமாரியாக கமென்ட் போட்டுள்ளனர். சிலர், பார்ட்டிக்கு என்னை கூப்பிடுங்க, செம ஜோக் சொல்றோம் என்று கலாய்த்துள்ளனர். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X