ட்ரென்ட்டாகும் சல்யூட் மை சிங்கப்பெண்ணே.. மாமியாரின் போட்டோவை பகிர்ந்த மருமகன்!
Recommended Video
சென்னை: டிவிட்டரில் ட்ரென்ட்டாகும் சல்யூட் மை சிங்கப்பெண்ணே ஹேஷ்டேக்கில் நடிகர் விஜயின் ரசிகர்கள் தங்களின் மனம் கவர்ந்த பெண்களின் போட்டோக்களை பகிர்ந்து வருகின்றனர்.
நடிகர் விஜய், இயக்குநர் அட்லி, இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் கூட்டணியில் உருவாகும் படம் பிகில். இந்த படத்தின் காட்சிகள் பெரும்பாலும் படமாகிவிட்டது.
பிகில் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் இடம் பெற்றிருந்த சிங்கப்பெண்ணே என்ற பாடல் அண்மையில் இணையத்தில் கசிந்தது.
நல்ல வரவேற்பு
இதனைத்தொடர்ந்து கடந்த 23ஆம் தேதி இரவு சிங்கப்பெண்ணே பாடலின் சிங்கிள் ட்ராக் படக்குழுவால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. பெண்களை பெருமைப்படுத்தும் அந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
மருமகன் பகிர்ந்த போட்டோ
அந்த வகையில் ஒருவர் தனது மாமியார் போட்டோவையும் பகிர்ந்துள்ளார். என் மனைவி, தாய், மாமியார் என மூன்று பேரின் படங்களையும் பகிர்ந்துள்ளார் இந்த ரசிகர்.
அழகான தாய்
இந்த ரசிகர் இளநீர் விற்று தன்னை ஆளாக்கிய தனது தாயின் போட்டோவை பெருமையாக சல்யூட் மை சிங்கப்பெண் என பதிவிட்டுள்ளார்.
தங்களின் தெய்வம்
தன்னுடைய தந்தை இல்லாமல் 34 வருடங்கள் தன்னையும் தன் அண்ணனையும் தன் உழைப்பு மூலமாகவே முன்னேற்றி தங்களுக்கு தெய்வமாகவும் தங்கள் தந்தையாகவும் வாழும் தங்கள் அம்மா என மகன் ஒருவர் தனது தாயின் படத்தை பகிர்ந்திருக்கிறார்.
ரஹ்மான் பெருமிதம்
இப்படி வைரலாகும் சல்யூட் மை ஹேஷ்டேக்கை பார்த்த இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் இங்கு அத்தனை சிங்கப்பெண்களையும் பார்ப்பது ஆச்சரியமாக உள்ளது என பெருமிதத்துடன் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications