விவாகரத்து முடிவு துரதிர்ஷ்டவசமானது... கண்ணீரில் மூழ்கிய நாகார்ஜுனா!
ஐதராபாத் : சமந்தா மற்றும் நாகசைத்தன்யா இருவரும் தங்களது 4 ஆண்டு திருமண வாழ்வை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்.
இருவரும் கூட்டாக தங்களது விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து நாகசைத்தன்யாவின் தந்தையும் நடிகருமான நாகார்ஜுனா தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

சமந்தா -நாகசைத்தன்யா விவாகரத்து
நடிகை சமந்தா மற்றும் நாகசைத்தன்யா இருவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களில் இருவரும் விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து இருவரும் எதுவும் தெரிவிக்கவில்லை.

ட்விட்டர் மூலம் அறிவிப்பு
இந்நிலையில் தற்போது இருவரும் கூட்டாக ட்விட்டர் பக்கத்தின்மூலம் தாங்கள் இருவரும் விவாகரத்து செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளனர். இவர்களது 4வது திருமண நாள் வரும் 6ம் தேதி வரவுள்ள நிலையில் இந்த அதிரடி முடிவை ஆலோசித்து எடுத்துள்ளதாக இருவரும் தெரிவித்துள்ளனர்.

சொந்த பாதையில் பயணம்
இருவரும் முன்னதாக 10 ஆண்டுகளுக்கு மேலாக நட்புடன் பழகியதாகவும் தற்போது பிரிந்து அவரவர் பாதையில் பயணிக்க உள்ளதாகவும் இருவரும் தெரிவித்துள்ளனர். இந்த தங்களது முடிவுக்கு மதிப்பளித்து தங்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் ரசிகர்களை கோரியுள்ளனர்.

விவாகரத்து முடிவு துரதிர்ஷ்டவசமானது
இதனிடையே அவர்களின் இந்த முடிவு துரதிர்ஷ்டவசமானது என்று நாகசைதன்யாவின் தந்தையும் பிரபல நடிகருமான நாகார்ஜுனா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதை கனத்த இதயத்துடன் தான் கூறுவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் இது கணவன் மனைவியாக அவர்களின் சொந்த பிரச்சினை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறப்பான தருணங்கள்
சமந்தா மற்றும் சைதன்யா இருவரும் தன்னுடைய விருப்பத்திற்குரியவர்கள் என்றும், சமந்தாவுடன் தன்னுடைய குடும்பத்தினர் செலவிட்ட தருணங்கள் மிகவும் சிறப்பானது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இந்த நெருக்கடியான தருணத்தில் அவர்களுக்கு கடவுள் மனவலிமையை தரட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











