போலீஸில் புகார் அளித்த பூனம்.. போட்டோக்களை அதிரடியாக நீக்கிய சாம் பாம்பே.. பரபரக்கும் பாலிவுட்!

மும்பை: பூனம் பாண்டே தன் மீது புகார் அளித்ததை தொடர்ந்து தங்களின் திருமண போட்டோக்கள் உட்பட தாங்கள் ஒன்றாக இருந்த அனைத்து போட்டோக்களையும் டெலிட் செய்திருக்கிறார் அவரது கணவரான சாம் பாம்பே.

பாலிவுட் கவர்ச்சி நடிகையான பூனம் பாண்டே கடந்த 10 ஆம் தேதி தனது காதலரான சாம் பாம்பேவை முறைப்படி திருமணம் செய்தார்.

அவர்களின் திருமணத்திற்கு ரசிகர்கள் மட்டுமின்றி பாலிவுட் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். திருமணத்திற்கு பிறகும் தனது ஆபாச பட ஷுட்டிங்கில் பிஸியாக இருந்தார் பூனம் பாண்டே.

வித்தியாசமான லுக்

வித்தியாசமான லுக்

இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி ஹனிமூன் புறப்பட்டார். அப்போது மும்பை விமான நிலையத்தில் போட்டோக்களுக்கு போஸ் கொடுத்த பூனம் பாண்டே வித்தியாசமான லுக்குடன் இருந்தார். வெள்ளை நிற பேண்ட், லைட் பிங்க் க்ராப் டாப் அணிந்திருந்தார்.

வகுட்டில் குங்குமம்

வகுட்டில் குங்குமம்

அதோடு கை நிறைய வளையல்களும், கழுத்தில் மங்கள் சூத்ரா, நெற்றி வகுட்டில் குங்குமம் என போட்டோவுக்காக புது மணப் பெண்ணாய் இருந்தார். மேலும் மும்பை ஏர்போர்ட்டிலேயே தனது கணவருடன் ரொமான்ஸ் செய்த பூனம் பாண்டே அவரது கையை பிடித்து முத்தம் கொடுத்தார்.

போலீஸில் புகார்

போலீஸில் புகார்

இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் நடிகை பூனம் பாண்டே, தனது கணவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் நேற்று முன் தினம் திங்கள் கிழமை இரவு தான் ஹனிமூன் சென்றுள்ள கோவாவில் இருந்து போலீஸில் புகார் அளித்தார்.

10ஆம் தேதி திருமணம்

10ஆம் தேதி திருமணம்

அவரது புகாரை தொடர்ந்து தெற்கு கோவாவில் உள்ள கனகோனா போலீசார், பூனம் பாண்டேவின் கணவரான சாம் பாம்பேவை நேற்று கைது செய்தனர். இந்த விவகாரம் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூன்று ஆண்டுகள் லிவிங் டூ கேதர் வாழ்க்கைக்கு பிறகு கடந்த 10 ஆம் தேதி தான் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

போட்டோக்கள் டெலிட்

போட்டோக்கள் டெலிட்

திருமணம் ஆகி முழுதாக 15 நாட்கள் கூட ஆகாத நிலையில் ஹனிமூன் போன இடத்தில் இருவரும் சண்டை போட்டுள்ளனர். இந்த விவகாரம் போலீஸ் வரை சென்றுள்ளது. இதனால் விரக்தியான பூனம் பாண்டேவின் கணவர் சாம் பாம்பே, பூனமுடன் எடுத்த அனைத்து போட்டோக்களையும் டெலிட் செய்துள்ளார்.

அவ்வளவுதானா?

அவ்வளவுதானா?

தங்களின் திருமணம், மற்றும் நிச்சயதார்த்த போட்டோக்கள் உட்பட பூனம் பாண்டேவுடன் இருந்த சுவடே தெரியாத அளவுக்கு இன்ஸ்டாகிராமில் இருந்து அனைத்து போட்டோக்களையும் அதிரடியாக நீக்கியுள்ளார் சாம் பாம்பே. சாம் பாம்பேவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த போட்டோக்கள் நீக்கப்பட்டதை பார்த்த ரசிகர்கள் இருவரின் திருமண வாழ்க்கையும் அவ்வளவுதானா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X