சாமஜவரகமணா பாடலை சித் ஸ்ரீராம் சரியா பாடலை - கல்யாணி மாலிக் பதிவு... புறக்கணித்த ரசிகர்கள்
ஹைதராபாத்: நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த ஆலா வைகுந்தபுரமுலு படத்தில் இடம்பெற்ற சாமாஜவரகமணா என்ற பாடலின் சிங்கிள் ட்ராக் வெளியான ஐந்து நாட்களில் யூடியூபில் முதல் இடம் பிடித்தது. இந்நிலையில் இசையமைப்பாளர் கல்யாணி மாலிக் சித் பாடகர் ஸ்ரீராம் அந்த பாட்டை தவறாக பாடியதாக சமூக வலைதளத்தில் அவதூறாக பதிவிட்டிருந்தார். அவருடைய கருத்துக்கு எதிர்ப்பு எழுந்ததை அடுத்து அந்த பதிவை நீக்கிவிட்டார்.
அல்லு அர்ஜுன் மற்றும் பூஜா ஹெக்டே இணைந்து நடித்த ஆலா வைகுந்தபுரமுலு என்ற படத்தில் இருந்து இசையமைப்பாளர் தமன் இசையில் சமாஜவரகமணா பாடலின் முதல் சிங்கிள் வெளியாகி ஐந்தே நாட்கள் தான் ஆகியிருந்தாலும் யூடியூபில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

தமன், பாடகர் சித் ஸ்ரீராம் மற்றும் பாடலாசிரியர் சிரிவென்னேலா சீதாராம சாஸ்திரி மூவருக்கும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. ரசிகர்களின் அன்பு மழையை கமெண்ட் மூலம் பொழிந்து வருகின்றனர். அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் இந்த பாடல் வெளியானதிலிருந்து மீண்டும் மீண்டும் கேட்டு ரசித்து கொண்டிருக்கின்றனர்.
பாடகர் சித் ஸ்ரீராமின் குரல் தமனின் மெல்லிசைக்கு பொருத்தமாக அமைந்துள்ளது. ரசிகர்களின் பாராட்டையும் கைதட்டல்களையும் பெற்றுவந்த நிலையில் கல்யாணி மாலிக் சித் ஸ்ரீராம் பற்றி ஒரு தகவலை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். சித் ஸ்ரீராம் பாடலில் சில தெலுங்கு சொற்களை தவறாக உச்சரித்ததற்காக பாடகரை அவதூறாக பதிவிட்டிருந்தார். மேலும் இது உங்கள் நேரம், எனவே, நீங்கள் பாடுவது எதுவுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் கூறியிருந்தார்.
சித் ஸ்ரீராம் தற்போதைய பாடகர்களிடையே சற்று வித்தியாசமானவர். அதோடு அவர் சில தெலுங்கு வார்த்தைகளை ஒரு விசித்திரமான முறையில் உச்சரிப்பது உண்மைதான். அதற்காக அவர் தவறாக வார்த்தைகளை உச்சரிக்கிறார் என்று குற்றம் சாட்டுவது பொருத்தமற்றது என்று கூறி அவருடைய கருத்துக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், கல்யாணி மாலிக் தனது வெளிப்படையான காரணங்களால் சித் ஸ்ரீராம் பற்றி குறிப்பிட்ட பதிவை நீக்கிவிட்டார்.
இருப்பினும், தமனின் இசையில் சமாஜவரகமணா பாடல் இந்த இளைஞர்களின் காதுகளில் ஒலித்து கொண்டே இருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.


Click it and Unblock the Notifications











