எனது முதல் காதலன் யார் தெரியுமா?... அழகு சிரிப்புடன் மனம் திறந்து பேசிய சமந்தா!
சென்னை:தமிழ் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா பேமிலி மேன் 2 வெப் தொடர் மூலம் இந்தியிலும் பிரபலம் அடைந்தார். அதனை தொடர்ந்து சிடாடல் ஹனி பன்னி வெப் தொடரிலும் நடித்திருந்தார். தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா நடிப்பில் இருந்து விலகி இருந்தார். இந்நிலையில், தனது முதல் காதல் குறித்தும், சினிமா பயணம் குறித்தும் பகிர்ந்துள்ளது ரசிகர்களுக்கு புத்துணர்ச்சி அளித்துள்ளது.
ஜெஸ்ஸி ஆக மாறிய சமந்தா: நடிகை சமந்தாவின் அப்பா தெலுங்கர், அம்மா மலையாளம் என்றாலும் சமந்தா பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னை தான். இப்படி சென்னை பல்லாவரத்தில் படித்து வளர்ந்த பெண் பாலிவுட் வரை கலக்கி வருகிறார். பானா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். பிறகு, வின்னைத்தாண்டி வருவாயா படத்தில் செகன்ட் ஹீரோயினாகவும், தெலுங்கில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களுக்கு பிடித்த ஜெஸ்ஸியாக மாறினார். இங்கே என்ன ஜெஸ்ஸி ஜெஸ்ஸி சொல்லுதா என்று தெலுங்கு ரசிகர்களை தன் நடிப்பால் ஈர்த்தார் சமந்தா.

2ஆவது திருமணம்?: நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இந்நிலையில், பேமிலி மேன் இயக்குநர் ராஜூ நீடுமுடு என்பவரை திருமணம் செய்துகொள்வதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. வதந்தியாக வெளியான செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அன்பான வாழ்க்கை துணை கைக்குழந்தையுடன் இருந்தாலும் பரவாயில்லை என கேப்சன் போட்டு இன்ஸ்டாவில் பகிர்ந்தார். இந்த செய்தி காட்டுத்தீயாக மாறியது.
ராஜூவை தான் திருமணம் செய்துகொள்வார் என்றும் செய்திகள் கசிந்தது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களின் பேரன்பு: தசை அழற்சி நோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட சமந்தா உடற்பயிற்சி, அதற்கேற்ற உணவு உட்கொள்ளும் முறையை இன்ஸ்டாவில் பகிர்ந்து நான் நலமுடன் இருக்கிறேன் என கூறி ரசிகர்களை ஆறுதல்படுத்தினார். பின்னர், யசோதா, குஷி போன்ற படங்களில் நடித்தார். சுமாரான வரவேற்பை பெற்றது. அப்போதும், சமந்தா மீதான அன்பு ரசிகர்களுக்கு குறையவில்லை. அவரது உடல்நிலை குறித்து அவரது இன்பாக்சில் கேட்டு தெரிந்துகொண்டனர். அவ்வப்போது இன்ஸ்டாவில் தனக்கு பிடித்த படங்கள் மற்றும் நடிகைகள் நடித்த படம் குறித்தும் பாராட்டி பேசியது வைரலானது. ரசிகர்கள் என் மீது வைத்துள்ள அன்புக்கு நன்றி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

முதல் காதல்: தசை அழற்சி நோயில் இருந்து மீண்டுள்ள சமந்தா சமீபத்தில் அளித்துள்ள பேட்டி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதில், சினிமா தான் எனது முதல் காதல், இனி அதற்கு ஓய்வு அளிக்க மாட்டேன். நான் சினிமாவை மிகவும் நேசிக்கிறேன். ஏற்கனவே நிறைய இடைவெளி எடுத்துவிட்டேன். இனி என் சினிமா பயணத்தை புத்துணர்ச்சியுடன் தொடங்குவேன். இனி உங்களது சமந்தா தொடர்ந்து படங்களில் உங்கள் கண் முன் நிற்பார் என தெரிவித்துள்ளார்.
ரகத் பிரம்மாண்டு: நான் தற்போது ரகத் பிரம்மாண்டு தொடரில் நடித்து வருகிறேன். அதில் நடித்து முடித்தது ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளேன். அடுத்தடுத்து என் படங்களை நீங்கள் பார்ப்பீர்கள். அடுத்த 2, 3 மாதங்களில் எனக்கு நிறைய வேலை இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











