Samantha: படுக்கை அறைக் காட்சிகளில் நடித்ததால் சமந்தாவை நாக சைதன்யா பிரியல.. விஷயம் வேற!

ஹைதராபாத்: இணையத்திற்குள் நுழைந்தாலே டன் கணக்கில் கொட்டும் செய்தியாக இருப்பது நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலாவின் நிச்சயத்தார்த்த செய்திகளாக இருக்கின்றது. சோபிதா துலிபாலாவுக்கு இது முதல் திருமணம், ஆனால் நாக சைதன்யாவுக்கோ இது இரண்டாவது திருமணம். இவர் ஏற்கனவே கடந்த 2017ஆம் ஆண்டு நடிகை சமந்தாவை திருமணம் செய்தார். அதன் பின்னர் 2021ஆம் ஆண்டில் இவர்களது திருமணம் விவாகரத்தில் முடிந்தது. இப்படியான நிலையில், நாக சைதன்யா 2022ஆம் ஆண்டில் இருந்து சோபிதாவுடன் டேட் செய்து வருவதாக தகவல்கள் கசிந்தது.

Sobhita Dhulipala Naga Chaitanya Samantha

அதையடுத்து இந்த வராத்தின் தொடக்கத்தில் இருந்தே நாக சைதன்யாவுக்கும், சோபிதா துலிபாலாவுக்கும் நிச்சயதார்த்தம் என பேசப்பட்டது. அதேபோல் நேற்று அதாவது ஆகஸ்ட் 8ஆம் தேதி இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, நிச்சயதார்த்தம் முடிந்த பின்னர் நாக சைதன்யாவின் தந்தையும் நடிகருமான நாகர்ஜுனா தனது எக்ஸ் பக்கத்தில், நிச்சயதார்த்த புகைப்படங்களைப் பகிர்ந்து, இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

Sobhita Dhulipala Naga Chaitanya Samantha

டோலிவுட் மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த இந்திய சினிமா வட்டாரங்களில் இவர்களது நிச்சயதார்த்த பேச்சுகள்தான் ஓடிக்கொண்டு உள்ளது. இப்படியான நிலையில், சோபிதா துலிபாலா யார் என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது. குறிப்பாக தமிழ் சினிமாவில் பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்துள்ள சோபிதா அதன் பின்னர் வேறு எந்த படங்களும் அவரது நடிப்பில் இதுவரை வெளிவரவில்லை.

Sobhita Dhulipala Naga Chaitanya Samantha

கிளாமர்: படங்கள் மட்டும் இல்லாமல், வெப் தொடர்களிலும் நடித்து வருகின்றார். இந்த வெப் தொடர்களில் சோபிதா துலிபாலா மிகவும் கிளாமரான காட்சிகளில் நடித்துள்ளார். குறிப்பாக மேட் இன் ஹெவன் மற்றும் தி நைட் மேனேஜர் போன்ற வெப் தொடர்களில் பாலிவுட் நடிகைகளே அசரும் அளவிற்கு கிளாமர் காட்சிகளிலும் படுக்கை அறைக் காட்சிகளிலும் நடித்துள்ளார். இவர்களது நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் பலர், சோபிதா துலிபாலா நடிப்பில் வெளியான காண்டம் விளம்பரத்தை இணையத்தில் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர். அந்த விளம்பரத்திலும் சோபிதா துலிபாலா மிகவும் எக்குத்தப்பான போஸ்கள் கொடுத்து நடித்திருப்பார்.

Sobhita Dhulipala Naga Chaitanya Samantha

படுக்கை அறைக் காட்சிகள்: சமந்தாவை நாக சைதன்யா விவாகரத்து செய்ய முக்கியக் காரணமாக கிசுகிசுக்கப்பட்டதில் சமந்தா அதிகப்படியான படுக்கை அறைக்காட்சிகளில் நடிக்கின்றார் எனவும், நாக சைதன்யாவும், நாகர்ஜுனாவும் எவ்வளவோ சொல்லியும் சமந்தா கேட்காமல் தொடர்ந்து படுக்கை அறைக் காட்சிகளில் நடித்து வருகின்றார் என கூறப்பட்டது. சமந்தாவும் நாக சைதன்யாவும் விவாகரத்து பெற்றபோது, புஸ்பா படத்தில் சமந்தா கிளாமர் ஆட்டம் போட்ட ஊ சொல்றியா மாமா பாடல் வெளியானது. விவாகரத்திற்கு முன்னர் தி ஃபேமிலி மேன் வெப் தொடர் ரிலீஸ் ஆனது. இதில் சமந்தா மிகவும் நெருக்கமான படுக்கை அறைக் காட்சிகளில் நடித்திருந்தார்.

Sobhita Dhulipala Naga Chaitanya Samantha

காரணம்: படுக்கை அறைக்காட்சிகள் மற்றும் கிளாமர் காட்சிகளில் சமந்தா நடிப்பதால்தான் நாக சைதன்யா விவாகரத்து செய்ததாக கூறப்பட்டு வந்த நிலையில், அதில் உண்மை இல்லை என ரசிகர்கள் இணையத்தில் கிசுகிசுத்து வருகின்றனர். காரணம், சமந்தாவை விடவும் அதிகப்படியான படுக்கை அறைக் காட்சிகளில் நடித்தவர் நடிகை சோபிதா துலிபாலா. அப்படி இருக்கையில் கிளாமர் காட்சிகளில் நடித்ததால் சமந்தாவை நாக சைதன்யா விவாகரத்து செய்தார் எனக் கூறுவதை ஏற்க முடியாது எனக் கூறி வருகின்றனர்.

Sobhita Dhulipala Naga Chaitanya Samantha

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X