Samantha: சமந்தா அணிந்திருப்பதில் ‘அது’ தான் ரொம்ப காஸ்ட்லியாம்... அதோட விலை எவ்ளோன்னு தெரியுமா?

சென்னை: சமந்தா நடித்த சாகுந்தலம் திரைப்படம் கடந்த மாதம் 14ம் தேதி வெளியானது.

இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்பதால் 20 கோடி ரூபாய் வரை நஷ்டம் அடைந்ததாக சொல்லப்படுகிறது.

ஆனால், சமந்தா தற்போது சிட்டாடல் வெப் சீரிஸ் பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளார்.

இந்நிலையில், சமந்தா அணிந்திருப்பதிலேயே ரொம்பவே காஸ்ட்லியானது குறித்தும், அதன் விலை பற்றியும் தகவல் வெளியாகியுள்ளது.

 Samantha: Actress Samantha bought expensive sandals worth Rs 2 lakh

இதெல்லாம் ஓவரா இல்லையா சமந்தா

கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது சூர்யாவின் ரசிகையாக சத்யம் தியேட்டரை சுற்றிக்கொண்டிருந்தவர் சமந்தா. ஆனால் தற்போது பான் இந்தியா ஸ்டாராக உலகம் முழுவதும் சுற்றி வருகிறார். தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துக்கொண்டிருந்த சமந்தா, இப்போது பாலிவுட் வரை சென்று பான் இந்திய நடிகையாக பட்டையை கிளப்பி வருகிறார்.

முக்கியமாக சினிமா தவிர வெப் சீரிஸ்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தி பேமிலி மேன் வெப் சீரிஸில் சமந்தாவின் நடிப்பு எந்தளவுக்கு பாராட்டுகளைப் பெற்றதோ, அதேயளவு அவரது கவர்ச்சியும் எல்லைமீறி ரசிகர்களுக்கு விருந்து படைத்தது. அதேபோல் காதலித்து திருமணம் செய்துகொண்ட நாக சைதன்யாவையும் விவாகரத்து செய்த சமந்தா, இன்னொரு பக்கம் மயோசிடிஸ் பிரச்சினையாலும் பாதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இறுதியாக சமந்தா நடித்த சாகுந்தலம் திரைப்படம் கடந்த மாதம் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 3டி தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக உருவான இந்தப் படம் நெகட்டிவான விமர்சனங்களுடன் தோல்வியைச் சந்தித்தது. இதனால் 80 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான சாகுந்தலம், 20 கோடி ரூபாய் வரை நஷ்டம் அடைந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அதையெல்லாம் பெரிதாக கண்டுகொள்ளாத சமந்தா தற்போது சிட்டாடல் வெப் சீரிஸில் கவனம் செலுத்தி வருகிறார்.

 Samantha: Actress Samantha bought expensive sandals worth Rs 2 lakh

இதனிடையே தனது பிஸி ஷெட்யூலிலும் சம்மர் வெக்கேஷனுக்காக வெளிநாடுகளுக்கு டூர் சென்றுள்ளார் சமந்தா. அதற்காக நேற்று (மே 28) ஹைதராபாத் விமான நிலையம் சென்றிருந்த சமந்தாவின் புகைப்படங்களும் வீடியோக்களும் வைரலாகி இருந்தன. அதில் சமந்தா வெள்ளை நிற பேண்ட், கறுப்பு மேலாடை அணிந்திருந்தார். மேலும் இடுப்பில் ஹூடி ஜாக்கெட்டை கட்டிக்கொண்டு செம்மை ஸ்டைலிஷாக வலம் வந்தார்.

அதேநேரம் சமந்தா லூயிஸ் உய்ட்டன் பிராண்டின் ஸ்லைடு மாடல் செருப்புகளை அணிந்திருந்தது பலரது கவனத்தையும் ஈர்த்தது. தற்போது அந்த செருப்பின் விலை குறித்து தெரியவந்துள்ளது. அதன்படி, சமந்தா அணிந்திருந்த இந்த செருப்பின் விலை சுமார் 2500 டாலர்கள் என சொல்லப்படுகிறது. அதாவது இது இந்திய மதிப்பில் இரண்டு லட்சத்து ஆறாயிரம் ரூபாய்க்கும் அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது சமந்தா ரசிகர்கள் மட்டுமின்றி பலருக்கும் ஷாக்கிங்காக அமைந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X