»   »  படத்திலும் ரொமான்ஸ் செய்யப்போகும் புது காதல் ஜோடி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

படத்திலும் ரொமான்ஸ் செய்யப்போகும் புது காதல் ஜோடி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
சமந்தா அடுத்து யாருக்கு ஜோடி?- வீடியோ

ஐதராபாத் : நடிகை சமந்தாவிற்கும், நாகார்ஜூன் மகன் நாக சைதன்யாவுக்கும் கடந்த அக்டோபர் மாதம் வெகு சிறப்பாக திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பின்னரும் சமந்தா தற்போது விஷாலுடன் 'இரும்புத்திரை', சிவகார்த்திகேயனுடன் 'சீமராஜா', விஜய்சேதுபதியுடன் 'சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் முதன்முதலாக கணவர் நாக சைதன்யாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் சமந்தா.

நாக சைதன்யா

நாக சைதன்யா

டோலிவுட்டில் 'யுத்தம் சரணம்' படத்திற்கு பிறகு நாக சைதன்யா கைவசம் 'சாவ்யாசாச்சி' மற்றும் இயக்குநர் மாருதியின் படம் என 2 படங்கள் உள்ளது. தற்போது, மற்றுமொரு புதிய படத்தில் நடிக்க நாக சைதன்யா கமிட்டாகியுள்ளார். இந்தப் படம் சைதன்யாவின் கேரியரில் 17-வது படமாம்.

சமந்தா - சைதன்யா

சமந்தா - சைதன்யா

முழுக்க முழுக்க ரொமான்ஸ் படமான இந்தப் படத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட நாக சைதன்யா - சமந்தா ஜோடி நடிக்கவுள்ளனர். இப்படத்தை இயக்குநர் சிவநிர்வனா இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சைதன்யா ட்வீட்

இந்தப் படத்தை ஷைன் ஸ்க்ரீன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. காதல் மனைவி சமந்தா தனக்கு ஜோடியாக நடிக்கவிருக்கும் தகவலை நாக சைதன்யாவே தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளார்.

திருமணத்திற்கு பிறகு முதல் முறையாக

திருமணத்திற்கு பிறகு முதல் முறையாக

திருமணத்திற்கு முன்னர் ஏற்கனவே இருவரும் 'ஏ மாய சேசவே', 'மனம்', 'ஆட்டோநகர் சூர்யா' உட்பட நான்கு படங்களில் நடித்துள்ளனர். திருமணத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கும் முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Samantha going to act with her husband Naga chaitanya. It is first movie joins together after marriage. This is Samantha-Chaitanya pair's 5th movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X