சூர்யாவை பார்த்து பயந்த சமந்தா... என்ன காரணம்னு பாருங்க!

சென்னை : நடிகர் சூர்யா அடுத்தடுத்த படங்களில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார். அவரது அடுத்தடுத்த ட்ரீட்களால் ரசிகர்கள் மிகவும் உற்சாகமாக காணப்படுகின்றனர். அவருடன் ஏராளமான நடிகைகள் நடித்திருந்தாலும் சமந்தா அவருக்கு பெஸ்ட் ஜோடியாக கொண்டாடப்படுகிறார்.

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா தேர்ந்தெடுத்த கதைகளில் நடித்து வருகிறார். தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். இவரது சூரரைப் போற்று, ஜெய்பீம் மற்றும் எதற்கும் துணிந்தவன் படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்துள்ளன. இதில் சூரரைப் போற்று, ஜெய் பீம் படங்கள் ஓடிடியில் வெளியான நிலையிலும் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளன.

 எதற்கும் துணிந்தவன் படம்

எதற்கும் துணிந்தவன் படம்

3 ஆண்டுகளுக்கு பிறகு திரையரங்கில் வெளியான இவரது எதற்கும் துணிந்தவன் படமும் சிறப்பாக அமைந்துள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியிருந்தார். பாலியல் வன்முறைக்கு எதிரான கருத்துக்களை மையமாக கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டிருந்தது.

 பாலா இயக்கத்தில் சூர்யா

பாலா இயக்கத்தில் சூர்யா

இதையடுத்து தற்போது பாலா இயக்கத்தில் சூர்யா இணைந்துள்ளார். இந்தப் படத்தில் 18 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கூட்டணி இணைந்துள்ளது. படத்தின் முதல்கட்ட சூட்டிங் 34 நாட்கள் தொடர்ந்து கன்னியாகுமரியில் எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதத்தில் படத்தின் இரண்டாவது கட்ட சூட்டிங் திட்டமிடப்பட்டுள்ளது. படத்தை இந்த ஆண்டிற்குள் ரிலீஸ் செய்ய சூர்யா திட்டமிட்டுள்ளார்.

சூர்யாவின் 24 படம்

சூர்யாவின் 24 படம்

சூர்யா நடிப்பில் சிறப்பான பல படங்கள் வெளியாகியிருந்தாலும் அவருடைய கேரியரில் சிறப்பான படங்களில் ஒன்றாக 24 படம் காணப்படுகிறது. இந்தப் படத்தில் ஆத்ரேயா, சேதுராமன் மற்றும் மணி என 3 கதாபாத்திரங்களில் சூர்யா நடித்திருந்தார். படத்தை விக்ரம் குமார் இயக்கியிருந்தார்.

சயின்ஸ் பிக்ஷன் படம்

சயின்ஸ் பிக்ஷன் படம்

சயின்ஸ் பிக்ஷனை மையமாக கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டிருந்தது. நித்யா மேனன் மற்றும் சமந்தா என இரண்டு நாயகிகள் படத்தில் நடித்திருந்தனர். படத்தில் 3 கேரக்டர்கள் இருந்த நிலையில் ஆத்ரேயா என்ற கேரக்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அந்தக் கேரக்டரில் மிரட்டியிருப்பார் சூர்யா.

சமந்தா பகிர்ந்த வீடியோ

இந்நிலையில் அந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்து சமந்தா பகிர்ந்திருந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அந்தப் படத்தில் சூர்யாவின் கெட்டப் மாற்றங்கள் குறித்து அவர் தனது கருத்துக்களை அந்த வீடியோவில் பகிர்ந்துள்ளார். காலையில் தன்னுடன் ஒரு ரொமாண்டிக் காட்சியில் சூர்யா நடித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Recommended Video

சூர்யாவை பற்றிய ரகசியத்தை சொன்ன சிவகுமார் | Oh My Dog | Arun Vijay
சூர்யாவை பார்த்து பயம்

சூர்யாவை பார்த்து பயம்

காலையில் தன்னுடன் ரொமாண்டிக் காட்சியில் நடித்த சூர்யா, மதியம் ஆத்ரேயா என்ற கேரக்டரில் நடித்ததாகவும் அந்த கேரக்டரில் சூர்யாவின் நடிப்பை பார்த்து தான் நிஜமாகவே பயந்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த அளவிற்கு ஆத்ரேயா கேரக்டர் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X