சமந்தாவை கிள்ளினாரா ஜக்கி வாசுதேவ்.. ஈஷா யோகா மைய மகாசிவராத்திரி விழாவில் நடந்தது என்ன?
சென்னை: மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு ஈஷா யோகா மையத்தில் நடிகைகள் சமந்தா, ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், தற்போது சத்குரு ஜக்கி வாசுதேவ் நடிகை சமந்தாவை செல்லமாக கிள்ளியதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
உண்மையிலேயே நடிகை சமந்தாவை ஜக்கி வாசுதேவ் கிள்ளினாரா? இல்லை என்ன செய்தார் என பலரும் விளக்கி வருகின்றனர்.

டவுன் டு எர்த்
நடிகை சமந்தா டவுன் டு எர்த் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். அதை மேலும், நிரூபிக்கும் விதமாக இந்த மகாசிவராத்திரி விழா புகைப்படம் அமைந்துள்ளது. பிரபல நடிகையாக பந்தாவாகவோ செம ஸ்டைலாகவோ எல்லாம் சமந்தா உடை அணிந்து செல்லவில்லை. மேலும், மற்றவர்கள் இருக்கைகளை உட்கார்ந்து தியானம் செய்யும் போது சமந்தா தரையில் சாதாரணமாக அமர்ந்து தியானம் செய்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

ரகுலுடன் புகைப்படம்
இரவு முழுவதும் ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற மகாசிவராத்திரி விழாவில் நடிகை சமந்தா, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட நடிகைகள் கலந்து கொண்டனர். நடிகை ரகுல் ப்ரீத் சிங் மற்றும் சமந்தா தனது தோழிகளுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் வேற லெவலில் டிரெண்டானது.

மாஸ்க் அணிந்து
நடிகை சமந்தா மாஸ்க் அணிந்து ரொம்பவே பாதுகாப்பாக மகாசிவராத்திரி விழாவில் கலந்து கொண்ட புகைப்படமும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இதையெல்லாம் விட சமந்தாவின் வீடியோ ஒன்று இப்போ சமூக வலைதளத்தில் தீயாக பரவி வருவது தான் ஹைலைட்.
கிள்ளினாரா ஜக்கி வாசுதேவ்
அந்த வீடியோவில் நடிகை சமந்தாவை செல்லமாக சத்குரு ஜக்கி வாசுதேவ் கிள்ளுவது போல உள்ளது. அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் சமந்தாவை கிள்ளி விளையாடுகிறார் என கலாய்க்க தொடங்கினர். ஆனால், தெலுங்கு திரையுலகின் பின்னணி பாடகி மாங்க்ளியின் பாடலுக்கு நடனமாட சொல்லியே சமந்தாவை புஷ் செய்துள்ளார் ஜக்கி என்றும் ரசிகர்கள் விளக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











