பார்த்து விழுந்துடப் போறீங்க.. முட்டிப் போட்டு சமந்தா காட்டிய வித்தை.. பதறிப்போன ரசிகர்கள்!

சென்னை: நடிகை சமந்தா பந்து மேல ஏறி நின்னு பக்காவாக பேலன்ஸ் பண்ணும் வொர்க்கவுட் வீடியோவை பதிவிட்டு வைரலாக்கி உள்ளார்.

சினிமாவில் அறிமுகமாகி 11 ஆண்டுகள் ஆனதை சமீபத்தில் கொண்டாடிய சமந்தா தனது ரசிகர்களுக்கும் சினிமா கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடித்து வரும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார்.

11 வருஷம்

11 வருஷம்

இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா மற்றும் அதன் தெலுங்கு வெர்ஷன் படங்கள் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார் நடிகை சமந்தா. சமீபத்தில் சினிமாவுக்கு வந்து 11 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு தனது ரசிகர்களுக்கு வீடியோ போட்டு நன்றி தெரிவித்தார்.

காத்து வாக்குல ரெண்டு காதல்

காத்து வாக்குல ரெண்டு காதல்

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் சமந்தாவும் லீடு ரோலில் நடித்து வருகிறார். அனிருத் இசையில் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான ரெண்டு காதல் பாடல் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

வெப்சீரிஸ் எப்போ

வெப்சீரிஸ் எப்போ

ஏற்கனவே சமந்தா நடிப்பில் உருவாகி உள்ள தி ஃபேமிலி மேன் 2 வெப்சீரிஸ் விரைவில் அமேசான் பிரைமில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த நவம்பர் மாதமே அதன் படப்பிடிப்பு முடிந்த நிலையில், கடந்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்னமும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. சமந்தா வில்லியாக இந்த வெப்சீரிஸில் நடித்துள்ளார்.

சாய் பல்லவிக்கு பாராட்டு

சாய் பல்லவிக்கு பாராட்டு

சமீபத்தில் தனது கணவர் நாக சைதன்யாவின் லவ் ஸ்டோரி படத்தில் இடம்பெற்ற சரங்கதரியா பாடலை சமந்தா வெளியிட்டார். நாக சைதன்யாவுக்கு ஜோடியாக அந்த படத்தில் நடித்துள்ள சாய் பல்லவி ஆடிய நடனத்தை பார்த்து அசந்துப் போன சமந்தா சாய் பல்லவியை வாயாற பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

லவ் பிரேக்கப்

லவ் பிரேக்கப்

சென்னையில் படப்பிடிப்பில் பங்கேற்று வரும் நடிகை சமந்தா, சிறு வயதில் இருந்து தான் தங்கியிருந்த பல்லாவரம் நினைவுகளையும், தனது முதல் காதல் பிரேக்கப் ஆனது குறித்தும் கூறி பரபரப்பை கிளப்பினார். டோலிவுட் நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாக நடிகர் சித்தார்த்தை சமந்தா காதலித்தார். ஆனால், இவர் சொல்லும் பல்லாவாரம் கதையை பார்த்தால் அதற்கு முன்பாகவே பள்ளி அல்லது கல்லூரி பருவத்திலேயே ஒரு காதல் பிரேக்கப் ஆகியிருக்கும் போல என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

முட்டிப் போட்டு வித்தை

இந்நிலையில், தற்போது ரோஸ் கலரு பந்து மேல முட்டிப் போட்டு கீழே விழாமல் பேலன்ஸ் பண்ணி நிற்கும் மிகவும் கடினமான வொர்க்கவுட்டை செய்யும் வீடியோவை போட்டு தனது ரசிகர்களை மிரள வைத்துள்ளார் நடிகை சமந்தா. 1.8 மில்லியன் ரசிகர்கள் இந்த வீடியோவுக்கு லைக் போட்டுள்ளனர். பார்த்து விழுந்திடப் போறீங்கன்னு நெட்டிசன்கள் ரகளை செய்துள்ளனர்.

எல்லாம் ஒரு விளம்பரம் தான்

எல்லாம் ஒரு விளம்பரம் தான்

சினிமா மட்டுமின்றி விளம்பர படங்களிலும் நடிகைகள் நடித்து சம்பாதிப்பது வழக்கமான ஒரு விஷயம் தான். லாக்டவுன் நேரத்தில் இன்ஸ்டாகிராமிலேயே இது போன்ற வீடியோக்களை வெளியிட்டு புதிய பிராண்டுகள் குறித்த ஏகப்பட்ட விளம்பரங்களை நடிகை சமந்தா செய்து வந்தார். இந்நிலையில், Oziva Nutrition எனும் பிராண்டை பிரபலப்படுத்தவே இப்படி ஒரு வித்தை காட்டி வீடியோ போட்டுள்ளார் சமந்தா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X